Daily Archives: திசெம்பர் 5, 2005

முக்கியமில்லாத செய்திகள்

Dinamalar.com: ராஜாஜியின் 127வது பிறந்த நாளை முன்னிட்டு ராஜாஜி நினைவு விருது தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு வழங்கப்படுகிறது.

ராஜாஜியின் 127வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுத் தொண்டில் தலைசிறந்து விளங்குபவர்களுக்கு முதன் முறையாக ‘ராஜாஜி நினைவு விருது’ ராஜாஜி பவுண்டேஷன் சார்பில் வழங்கப்படவுள்ளது. இதற்கான விழா வரும் 10ம் தேதி கிண்டியில் உள்ள ராஜாஜி நினைவு மண்டபத்தில் நடக்கிறது.

மத்திய நகர்புற வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி விழாவுக்கு தலைமை தாங்குகிறார். தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ், அகில இந்திய காங்., செயலர் ஜெய்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். உயர்நிலைப் பள்ளியில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடி வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அடுத்த இரண்டாண்டு தொடர் கல்விக்கான உதவித் தொகையும் விழாவில் வழங்கப்படுகிறது.

இத்தகவலை ராஜாஜி பவுண்டேஷன் அறங்காவலரும் ராஜாஜியின் கொள்ளு பேரனுமான சி.ஆர்.கேசவன் தெரிவித்துள்ளார்.

வலை நிருபர்: ராஜாஜியின் பேரன் சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து திரும்பி காங்கிரஸில் சேர்ந்தார். வருகின்ற சட்டசபை தேர்தலில் மைலாப்பூரில் நிற்பதற்கு ஆதரவு திரட்டுகிறார்.


(c) The Creating Passionate Users


| |

காலஷேபம்

நத்தாரிடம் கேட்டால் நடவாதது ஏதுமில்லை என்பது நான்மறை மொழி. என்னுடைய நத்தார் தின விழைவுப் பட்டியல்.

நன்றி: tamizhbooks.com

தேரோடும் வீதி – நீல. பத்மநாபன் – 250.00
புனலும் மணலும் – ஆ. மாதவன் – 90.00
நினைவுப் பாதை – நகுலன் – 250.00
கோவேறு கழுதைகள் – இமையம் – 125.00

தமிழ்நாட்டில் பஞ்சாயத்து அமைப்புகள் – ஆர். ருக்மணி – 25.00
தமிழ்நாட்டில் புதிய பஞ்சாயத்து அரசாங்கம் – டாக்டர்.க. பழனித்துரை – 20.00
20ஆம் நூற்றாண்டு ஓவியம் – கொ.றொ. கொண்ஸ் ரன்ரைன் – 50.00
இசைக்கருவிகள் – பி. தைன்ய தேவா – 37.00

தமிழில் சிறுபத்திரிகைகள் – வல்லிக்கண்ணன் – 55.00
மணிக்கொடி காலம் – பி.எஸ். ராமையா – 75.00

சமூக உளவியல் – அண்ணாமலை பல்கலைக்கழகம் – 45.00
சமூகவியல் கோட்பாடுகள் – அண்ணாமலை பல்கலைகக்கழகம் – 65.00
சமூகவியல் பிரச்சினைகள் – அண்ணாமலை பல்கலைக்கழகம் – 55.00
சமூகவியல் கொள்கைகள் – அண்ணாமலை பல்கலைக்கழகம் – 100.00

தென்னிந்திய குலங்களும் குடிகளும் (நான்கு பாகங்கள்) – தமிழ்ப் பல்கலைக் கழகம் – 465.00
சமுதாய இயக்கமா ஆர்.எஸ்.எஸ்? – கலி. பூங்குன்றன் – 30.00
மாஜினியின் மனிதனின் கடமை – வெ. சாமிநாத சர்மா – 45.00
பௌத்த தருமம் – ப. ராமஸ்வாமி – 80.00

இஸ்லாத்தின் பிரச்சினைகள் ஒரு மறுபார்வை – அஸ்கர் அலி எஞ்சினியர் – 80.00
உறவுகளும் உரிமைகளும் – அப்துல் அஜீஸ் ரஸாதி – 50.00
ஏழுர்த் திருவிழாக்கள் – முனைவர் ஆ. சண்முகம் – 60.00

இந்திய அரசியல் சட்டம் ஓர் அறிமுகம் – ச. செந்தில்நாதன் – 18.00
தலித் விடுதலையும் கிறித்துவமும் – வி.டி.ராஜசேகர் – 15.00
இந்துமதக் கொடுங்கோன்மையின் வரலாறு – தவத்திரு தர்மதீர்த்த அடிகளார் – 120.00

சென்னை பெருநகர தொழிற்சங்க வரலாறு – தே. வீரராகவன் – 150.00
நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வரலாறு – நாஞ்சில் நாடன் – 60.00
ஆரியர் வரலாறு (பாகம் ஒன்று) – சோதிப்பிரகாசம் – 96.00
ஆரியர் வரலாறு (பாகம் இரண்டு) – சோதிப்பிரகாசம் – 96.00
திராவிடர் வரலாறு – சோதிப்பிரகாசம் – 80.00

புதுமைப்பித்தன் – வல்லிக்கண்ணன் – 15.00
பம்மல் சம்பந்த முதலியார் – ஏ. என். பெருமாள் – 15.00
வ. ரா. (வ. ராமசாமி) – சு. வேங்கடராமன் – 15.00
பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை – இராம. சுந்தரம் – 15.00

கு. பா. ராஜகோபாலன் – இரா. மோகன் – 15.00
த. நா. குமாரஸ்வாமி – த. கு. அஸ்வின் குமார் – 25.00
வெ. சாமிநாத சர்மா – பெ. சு. மணி – 25.00
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – அறந்தை நாராயணன் – 25.00

வ. சுப. மாணிக்கம் – இரா. மோகன் – 25.00
அ. மாதவையா – சு. வேங்கடராமன் – 25.00
ச. து. சு. யோகியார் – எஸ். ஆர். அசோக்குமார் – 25.00
நாவலர் சோமசுந்தர பாரதியார் – ச. சாம்பசிவனார் – 25.00

நா. பார்த்தசாரதி – திருப்பூர் கிருஷ்ணன் – 25.00
ம. பா. பெரியசாமி தூரன் – சிற்பி பாலசுப்பிரமணியம் – 25.00
அகிலன் – சு. வேங்கடராமன் – 25.00
வ. வே. சு. ஐயர் – கோ. செல்வம் – 25.00

மு. வ. (மு. வரதராசனார்) – பொன். சௌரிராஜன் – 25.00
விந்தன் – மு. பரமசிவன் – 25.00
நா. வானமாமலை – எஸ். தோத்தாத்ரி – 25.00
சோமலெ – நிர்மலா மோகன் – 25.00

உமறுப்புலவர் – சி. நயினார் முகமது – 25.00
செய்குத் தம்பிப் பாவலர் – மு.பரமசிவம் – 25.00
வை. மு. கோதை நாயகி அம்மாள் – இரா. மோகன் – 25.00
தேவநேயப் பாவாணர் – இரா. இளங்குமாரன் – 25.00

ஜீவானந்தம் – டி. செல்வராஜ் – 80.00
`எழுத்து’ சி.சு.செல்லப்பா – வல்லிக்கண்ணன் – 60.00
நாடு போற்றும் நாரண துரைக்கண்ணன் – மு. பரமசிவம் – 20.00
எழுத்துச் செல்வர் வல்லிக்கண்ணன் – மு. பரமசிவம் – 45.00

எழுத்தாளர் கு. அழகிரிசாமி – மு. பரமசிவம் – 75.00
தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் – தா. வே. வீராசாமி – 45.00
ஒரு கம்யூனிஸ்ட்டின் நினைவுக் குறிப்புகள் – பி. ராமச்சந்திரன் – 60.00
நான் எவ்வாறு கம்யூனிஸ்ட் ஆனேன்? – இ.எம்.எஸ்.நம்பூதிரிபாத் – 25.00

குமரி நாட்டுப்புறவியல் – அ. கா. பெருமாள், சண்முகசுந்தரம் – 75.00
கொங்கு நாட்டுப்பறவியல் – தொகுப்பு : சு. சண்முகசுந்தரம் – 100.00
சென்னை நாட்டுப்புறவியல் – தொகுப்பு : சு. சண்முகசுந்தரம் – 65.00
நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள் – தே. லூர்து – 50.00

தஞ்சை நாட்டுப்புறவியல் – ஆறு. இராமநாதன் – 100.00
தலித் நாட்டுப்புறப் பாடல்கள் – விழி.ப. இதயவேந்தன் – 60.00
இராமாயண தோல் பாவைக்கூத்து – அ.கா. பெருமாள் – 90.00
தேவராட்டம் – ஒ. முத்தையா – 70.00

சேரிப்புறவியல் – கே.ஏ. குணசேகரன் – 100.00
கிறித்துவரும் தமிழும் – மயிலை சீனிவேங்கடசாமி – 25.00
சிலப்பதிகாரத் திறனாய்வு – ம.பொ.சி. – 75.00
மனக்குகை ஓவியங்கள் – தி.க.சி. – 45.00

வள்ளலாரும் பாரதியும் – ம.பொ.சி. – 15.00
தழும்புகள் – அண்ணா – 75.00
கம்பராமாயண ரஸனை – வ.வே.சு.ஐயர் – 20.00
புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் எம்.வேதசகாயகுமார் 60.00

நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று – நாஞ்சில்நாடன் – 55.00
நாவலும் வாசிப்பும் – ஆ. இரா. வேங்கடாசலபதி – 60.00
கம்பரிடம் யான் கற்ற அரசியல் – ம.பொ.சி. – 36.00
புரட்சிக்காரன் நடுவே – மாலன் – 10.00

மௌனியுடன் கொஞ்சதூரம் – திலீப்குமார் – 12.00
தி. ஜ. ர. வின் எழுத்தும், தேசிய உணர்வும் – விட்டல்ராவ் – 32.00
கு. ப. ரா. – கரிச்சான் குஞ்சு – 24.00
ஆர். சண்முக சுந்தரத்தின் கொங்கு மணம் கமழும் நாவல்கள் – டி. சி. ராமசாமி – 22.00

கலித்தொகை, பரிபாடல் காட்சிகள் – நா. பார்த்தசாரதி – 25.00
ரசிகமணி டி.கே.சி. கட்டுரைகள் – டி. கே. சி. – 20.00
இலங்கையின் இனவர்க்க முரண்பாடுகள் – குமாரி ஜெயவர்த்தனா – 28.00
இலங்கையின் தமிழ்ப் புதினப் பத்திரிகையின் வளர்ச்சி – இ. சிவகுருநாதன் – 30.00

ஈழத்து இலக்கியத் தடம் கார்த்திகேசு சிவத்தம்பி 75.00
ஈழத்து வாழ்வும் வளமும் – பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை – 45.00
வட இலங்கை நாட்டார் அரங்கு – கலாநிதி காரை சுந்தரம்பிள்ளை – 150.00
தமிழ் இலக்கியத்தில் ஈழத் தமிழறிஞரின் பெரு முயற்சிகள் – பேராசிரியர் பொ. பூலோகசிங்கம் – 75.00

இந்திய ஓவியம் – க. சிவராமமூர்த்தி – 8.00
ஆப்பிரிக்க சினிமா யமுனா ராஜேந்திரன் 35.00
பாதல் சர்க்கார் நாடகங்கள் – தமிழில் : கோ. ராஜாராம் – 40.00
வண்ணதாசன் கடிதங்கள் – வண்ணதாசன் – 75.00


| |

ஸான் எல்லே

கலிஃபோர்னியாவில் எல்லா ஊர்களும் சாண்டாவின் சொந்தக்காரர் பெயர்களை கொண்டிருக்கிறது. சண்டாளா என்று திட்டுவது போல் சாண்டா அனா, ஒரு கை ஒசை போல் சான் ஓஸே, சாண்டா க்ளாஸை ஒத்த சாண்டா க்ளாரா என்று ‘ஸான்’ மயம்.

ஸான் நிறைந்த விரிகுடாப் பகுதியில் இருந்து எல்லே செல்லும் வழியெல்லாம் வயற்காடுகள். போகிற வழியெல்லாம் ‘சான்’ என்று துவங்கிய ஊர் பெயர்களை மேய்ந்ததில் சில நாள்களாக கனவெல்லாம் sans serif எழுத்துருவில் வந்து போகிறது.

எதைப் பார்த்தால் நல்லா இருக்கும், என்ன விருப்பம் என்பதை அறிந்திருந்த திருமலை ராஜன் என்னிடம் மாட்டிக் கொண்டார். ரதசாரதியாக மாறினார். ஆலோசகனாக ‘ஆல்கட்ராஸ்’ஐயும் பனி பாஸ்டனில் வந்திருந்ததால் டாஹூ ஏரியையும் நிராகரித்தார். நளபாகத்தைப் Group Photo in Grape Farms of Napaபரிமாறினார். திருவாசகம் முதல் பழைய ‘தங்கங்களே’ இருந்து புதிய கஸ்தூரி மான் வரை போட்டுத் தாலாட்டினார். கோல்டன் கேட் பின்னணியில் தெரியுமாறு தோளில் கைபோட்டு எடுத்த நிழற்படங்களின் போது ‘யோ மான்’ என்ற பார்வையாளர்களின் விளிப்பில் காதலராகவும் மாறியிருப்பார். திருமலை ராசா புண்ணியத்தில் மூன்று நாளில் பே ஏரியா சிற்றுலா கிடைத்தது.

நாபா என்றால் திராட்சை ரசம்தானே என்றிருந்தவனுக்கு நா பார்த்தசாரதியை சில காலம் முன் இணையம் அறிமுகம் செய்தது. நாபா பள்ளத்தாக்கெங்கும் திராட்சைத் தோட்டங்கள். பெருமாள் கோவிலில் சன்னிதி தோறும் தீர்த்தம் கொடுப்பார்கள். அதுபோல் நாலைந்து விதமான வைன்-க(ள்)ளைப் சுவை பார்க்க கொடுக்கிறார்கள். துவாதசி பாரணை முடிக்க கையில் லோட்டாவுடன் சந்நிதிதோறும் செல்வது போல் ரோபார்ட் மொண்டாவி, ஸ்டெர்லிங் என்று திக் விஜயம்.

நிஜமான தீர்த்தம் லிவர்மூர் கோவிலில் கிடைக்கிறது. சில காலம் முன்பு அருணுக்குக் கிடைத்தது போல் எனக்கு ஆஸ்திக பெண் நண்பிகள் அறிமுகம் எதுவும் கிடைக்காததால் Glendale Farms Mausolem & Mortuariesஆண்டவனின் பூரண கடாட்சமும் எனக்குக் கிடைத்ததாகவே எண்ணிக் கொண்டேன்.

காரும் கார் சார்ந்த பகுதிகளையும் எல்லே என்று அழைக்கலாம். தனித்தனியாக ஆறு வழிப்பாதைகளை இருபுறமும் கொண்டிருந்தாலும், வரைபடம் கொள்ளாத அளவு நெடுஞ்சாலைகள் இருந்தாலும் மதியம் ஒரு மணிக்கும் பிரெட்டுக்கு ஜாம் தடவிக் கொள்வது போல் போக்குவரத்து நெரிசல். எல்லோரையும் மாட்டு வண்டிக்கு மாறச் சொல்லி விடலாம். மூன்று டாலர் கேட்கும் எரிவாயு விலையும் இறங்கும். மக்களும் வேகமாக வேலைக்கு செல்லலாம்.

ஒரு பரதேசியின் பயணக் குறிப்புகள் போல் இல்லாவிட்டாலும் நேரம் கிடைக்கும்போது மீதி குறிப்புகளை தொடர்கிறேன்.


அபாஹரன்

BIPASHA BASU (c) Outlook & Sandeep Adhwaryu

Sachen with Vijayபிரகாஷ் ஜாவின் புதிய படமான அபாஹரன் (அப்படியென்றால் என்ன அர்த்தம்?) குறித்த சிறு அறிமுகம் பார்க்கக் கிடைத்தது.

தாழ்த்தப்பட்டோர் நலனை முன்னிறுத்தும் ஜாதிக்கட்சித் தலைவரின் கடத்தல் அரசியலை படம் பிடித்திருக்கிறார்கள். பிரகாஷ் ஜா இயக்கியதில், தாமுல் ரசனையாளர்களால் முன்னிறுத்தப்பட்டது. நான் பார்த்ததில் மாதுரி நடித்த ம்ருயுதந்த் பிரச்சார நெடி வீசும் படம். சார்ல்ஸ் டிக்கன்ஸனின் ‘Tale of two cities’ சொல்லும் பந்திஷும் விமர்சகர்களால் நிராகரிக்கப்பட்டது

தீப்தி நவல்-ஐ மணமுடித்த பிறகு பிரமாதமான படங்கள் வெளிவரவில்லை என்று கிண்டல் செய்கிறார்கள். ராம் விலாஸ் பாஸ்வானை ஒத்த நானா பட்னேகர், அஜய் தேவ்கன், என்று நட்சத்திரங்கள் நிறைந்திருக்கிறார்கள்.

ஒலிம்பிக்ஸை ஆரம்பித்தவர் ஹிட்லர் என்று திருவாயருளிய பிபாஷா பாசு எப்படி நடித்திருக்கிறார் என்பதற்காக பார்க்க வேண்டும்.

தொடர்புடைய சுட்டிகள்:
Prakash Jha :: பிர்காஷ் ஜா – வலைப்பதிவு | ரீடிஃப் | apaharan | நிதிஷ் குமார் குறித்து ஜா | Apaharan – வலைக்குறிப்புகள்