Daily Archives: ஜூலை 12, 2005

சுந்தர் சி

எனக்கு பிடித்த பாடல்‘ என்று சுந்தர் சி பட்டியல் போட்டுக் கொண்டிருந்தார். நடிகர்களிடம் இந்த மாதிரி ‘நடித்ததில் பிடித்தது’ என்று கேட்கும்போது ‘politically correct’ நடுநிலைமையான பதில்களை சொல்வார்கள்.

‘ரஜினி சார் மாதிரி வருமா… அவர் பெரிய மனுஷத்தனம் இல்லாமப் பழகுவார்.’
‘கமல் மாதிரி கலைஞன் இருப்பாரா… எனக்கு நடிப்பு சொல்லித் தந்ததே அவர்தான்!’
‘கேப்டனுடன் நடிப்பதற்குக் கொடுத்து வச்சிருக்கணும்… நமக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டு ஒதுங்கி நின்று குழந்தை போல் சிரிப்பார்.’

என்னும் ரேஞ்சுக்கு அடுக்கி செல்வார்கள்.

சுந்தர் சி கொஞ்சம் அடக்கி வாசித்தார்.

1. ‘அதோ அந்தப் பறவை போல’ – ஆயிரத்தில் ஒருவன்

படம் முடியும் தருணத்தில் வரும் பாடல்களின் தாத்பரியத்தை விளக்கினார். அன்னியனில் ‘ரண்டக்க ரண்டக்க’ வரும்போது பார்வையாளன் கடுப்பாகக் கூடாது. ‘எப்படா படம் முடியும்’ என்றோ, தம்மடிக்கவோ வெளியில் செல்லாமல், பாடலை ரசிக்க வேண்டும். அந்த விதத்தில் தன்னைக் கவர்ந்த பாட்டாக அமைந்திருக்கிறது என்றார்.

(எம். ஜி. ஆர் ஆச்சு)

2. ‘மறைந்திருந்து பார்க்கும்’ – தில்லானா மோகனாம்பாள்

திரைக்கதையுடன் ஒத்திசைவாக அமைந்திருக்கும் பாடலுக்கு எடுத்துக்காட்டாக இதை எடுத்துக் கொண்டார். நகைச்சுவை சேஷ்டைகள், காதல் ரசம், சீரியஸ் நடனம், அப்பாவி ஜனங்கள் என்று பல விஷயங்கள் கலந்து கட்டி எடுப்பதில் உள்ள கஷ்டங்களைப் பகிர்ந்து கொண்டார்.

(சிவாஜி ஓவர்)

3. ‘சொன்னது நீதானா’ – நெஞ்சில் ஓர் ஆலயம்

எனக்கு இந்தப் படத்தில் ‘நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்’ நெஞ்சில் மறக்காத பாடல். அவருக்கு இது பிடித்தமான பாடல். அத்தனை சிறிய அறையில் ஒரு படுக்கை, மெகா வீணை, எல்லாவறையும் சுழலும் கேமிரா கோணங்கள் வைத்து ஸ்ரீதர் படம் பிடித்ததை வியந்தார். ஒளிப்பதிவில் சாதனை கல்லாக தான் கருதும் பதிவு என்ற பிறகுதான் குட்டி ரூமையும், அதில் வரும் காட்சியமைப்பின் மூலம் நிலைமை கை மீறுவதையும் சோகத்தையும் கொண்டு வந்ததை கவனிக்க முடிந்தது.

4. ‘காதல் வந்தால்’ – இயற்கை

அந்தக் காலத்துக்கு ஸ்ரீதர். இந்தக் காலத்திற்கு எஸ். பி. ஜகன்னாதன். நல்ல படப்பதிவு, இசை, வரிகள். அமைதியான ஷாம்.

5. ‘காதல் வளர்த்தேன்’ – மன்மதன்

என்னென்னவோ காரணம் சொல்லிக் கொண்டிருந்தார். எதுவும் மனதில் நிற்கவில்லை. ‘ஆளவந்தான்’ மூலம் கமல் அழித்தார்; ‘பாபா’ மூலம் ரஜினியும் சுந்தர் சி.யை மூட்டை கட்டினார். ‘யூ டூ சிம்பு!?’ என்று கேட்கும் போல் படம் ஏதாவது இயக்க வாய்ப்பளித்திருக்கிறாரா என்று அறியேன்.

6. ‘சின்னத் தாயவள்’ – தளபதி

ரஜினியின் பாடலை சொல்லாமல் எப்படி நிகழ்ச்சியை முடிக்க முடியும். ராக்கம்மா கையைத் தட்டி இருக்கலாம்.

Yamuna Rajendran (c) Thinnai.com 

Yamuna Rajendran (c) Thinnai.com Posted by Picasa

கண்டனம்

Yamuna Rajendran (c) Thinnai.comYahoo! 360° – RP RAJANAYAHEM – Entry for July 08, 2005 ::

யமுனா ராஜேந்திரன் ஆர்.பி. ராஜநாயஹமுக்கு எழுதிய கடிதத்தில் இருந்து….

இது ஒரு கோழைத்தனமான செயல்.இறந்தவர்கள் எல்லாருமே உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள். தொழிலாளர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் எல்லா இனத்தையும், மதத்தையும் சார்ந்த்வர்கள்.

தீவிரவாத அரசியலை இழிக்க வேண்டும். இந்த பாதகர்களின் கொடுங்கோன்மையை இந்திய இடதுசாரிகள் இன்னும் அடையாளம் கண்டு கொள்ளவில்லை.

ஆங்கில மூலத்தை முழுவதும் படிக்க: LONDON BOMB BLASTS

திண்ணையில் யமுனா ராஜேந்திரன் படைப்புகள்

நன்றி: Yahoo! 360° – R.P. RAJANAYAHEM