Monthly Archives: ஏப்ரல் 2005

இரவல் பிழைப்பு

கல்கி: ஒரு நண்பர் என்னிடம் பலமாகச் சண்டை பிடித்தார். நான் புனை பெயர் வைத்துக்கொண்டு பத்திரிகைகளுக்கு எழுதுவது தான் அவருடைய கோபத்துக்குக் காரணம். ”ஏன் சொந்தப் பெயர் போட்டுக் கொண்டு எழுதக்கூடாது? சொந்தப் பெயரைச் சொல்லிக்கொள்ள வெட்கமாயிருக்கிறதா?

“ஏன் இந்தக் கோழைத்தனம்?” என்று அவர் கேட்டார். உண்மை என்னவென்றால், அவருக்கு ஒரு பிரமை.

என்னுடைய கதைகள், கட்டுரைகள் முதலியவற்றினால் எனக்கு வரவேண்டிய கீர்த்தி (!) அவ்வளவும் என்னைச் சேராமல் அநியாயமாய்க் கொள்ளை போய்விடுகிறதென்பது அவருடைய கவலை.

பெயர் போட்டுக் கொள்ளாததற்குக் கோழைத்தனம் காரணமல்ல என்று நான் சொல்ல வேண்டியதில்லை.

அப்படி வெட்கப்படும்படியான சங்கதி ஏதேனும் நான் எழுதுகிறேனா என்ன? ஒன்றுமில்லை. பின்னர், புனைபெயர் ஏன்? உலகத்தின் மனப்போக்குதான் அதற்குக் காரணம். சொந்தமாகச் சிந்தனை செய்யும் சக்தியை, இந்த உலகத்தில் பகவான் மிகவும் கொஞ்சமாக வைத்துவிட்டார். நம்மில் பெரும்பாலோர் பிறருடைய அபிப்பிராயங்களையே நம்முடைய சொந்த அபிப்பிராயமாகக் கொண்டு போராடுகிறோம்.
…………….
ஏதேனும் ஒரு விஷயம் கேள்விப்பட்டால், அதன் குணா குணங்களைப் பற்றி முதலில் ஆராய்வதில்லை. அதைச் சொல்வது யார் என்று முதலில் கவனிக்கிறோம்.

சொல்பவர் பிரசித்தி பெற்றவராயிருந்தால் அல்லது நமக்குப் பிடித்தவராயிருந்தால் உடனே விஷயத்தை ஆதரிக்கத் தொடங்குகிறோம்; அதைப் பாராட்டுகிறோம்; அதன் புகழைப் பாடுகிறோம். சொல்பவர் சாதாரணப் பேர்வழியாயிருந்தால் உடனே அதை மறந்துவிடுகிறோம். சொல்பவர் நமக்குப் பிடிக்காதவராயிருந்தாலோ, உடனே குறை சொல்லத் தொடங்கி விடுகிறோம். இலக்கியத் துறையில் மட்டுமல்ல; அரசியல், சங்கீதம், சமூக சீர்திருத்தம் ஆகிய எல்லாவற்றிலும் இப்படித்தான்.

பெரும்பாலும், எல்லாவற்றிலும் நாம் இரவல்பிழைப்பே பிழைத்து வருகிறோம். சென்னையிலுள்ள எனது நண்பர் ஒருவருக்கு ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரிடம் அபார பிரேமை. ஆகையால் அவருக்குப் பண்டித நேருவைக் கொஞ்சமும் பிடிக்காது. ஒருநாள் நான் பத்திரிகை படிக்க அவர் கேட்டுக் கொண்டிருந்தார். இந்திய சட்டசபையில் ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் செய்த பிரசங்கத்தைப் படித்தேன். அப்போது அவர் அடைந்த உற்சாகத்தையும், காட்டிய சந்தோஷத்தையும் சொல்ல முடியாது.

பிரசங்கம் முடிந்ததும், ”ஓ! நீர் என்னதான் சொல்லும், அந்த ஒரு மனுஷனால்தான் இப்படிப் பேச முடியும்!” என்றார் நண்பர். ”சுவாமி! மன்னிக்க வேண்டும். பெயர் தவறாகச் சொல்லிவிட்டேன். இப்பொழுது படித்தது பண்டித நேருவின் பிரசங்கம்” என்றேன் நான். அவரால் நம்ப முடியவில்லை. பத்திரிகையை வாங்கிப் பார்த்துவிட்டு, ”சரிதான்; தொலையட்டும். நடுவில் கொஞ்சம் சந்தேகமாய்த்தானிருந்தது. இவ்வளவு அசம்பாவிதமாய் ஐயங்கார் பேசியிருக்க முடியாதே என்றுகூட நினைத்தேன்” என்றார்.

சற்று முன்னால், நான் பிரசங்கம் நன்றாயில்லையென்று சொல்லியிருந்தால், அவர் என்னை அடிக்கவே வந்திருப்பார்.

கல்கி கட்டுரைகள் (தொகுதி -3) :: மணிவாசகர் பதிப்பகம்

ஓர்பு

Reflection for the Day: சௌகரியமும் சொகுசுமே வாழ்க்கையின் அத்தியாவசியமாக நாம் செயல்படுகிறோம். ஆனால் நமது உளக்கிடக்கைக்கு எதிலாவது முனைப்புடன் ஈடுபடுதலே போதுமானது.

சார்லஸ் கிங்ஸ்லி

அக்கம்பக்கம்

Mdeii Life ::

திரைக்கதையில் வரும் காட்சிகள் போல் சில பதிவுகள். எதற்காக அடுத்தவன் டைரியைப் புரட்டிக் கொண்டிருக்கிறேன் என்பதற்கு காட்டாக சில நேர்மைகள். இணையவழக்கம் போல் வித்தியாசமான முகவரியில் இருக்கிறாரே என்று படிக்க ஆரம்பிக்கலாம்.

பாலக்காட்டு மச்சானுக்கு பாட்டுன்னா உசிரு‘ என்று ஆட்டம் கட்டி கலக்கியவன். இன்று நுணுக்கமாக கன்னத்தில் முத்தமிட்டாலை அலசுகிறார் என்று செய்தியோடையை ஷார்ப்ரீடரில் போட வைக்கும் பதிவுகள்.

மஞ்சரி – ஏப். 05

Sify.com ::

* உங்களோடு ஒரு வார்த்தை
அது 1930. மகாத்மா காந்தியும் உடன் 78 சத்தியாக்கிரகிகளும் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த ஒரு முக்கிய நிகழ்வினை நிகழ்த்திக் காட்டினார்கள்.

* தென்கச்சி பதில்கள்
சுதந்திரம் என்பது என்ன சார்?

* 2005 சர்வதேச இயற்பியல் ஆண்டு
நடப்பு 2005 ஆம் ஆண்டை சர்வதேச இயற்பியல் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

* மரபணு மருத்துவம் ரவிஷங்கர்
இலக்கியவீதி மஞ்சரி டய்ஜஸ்ட் இணைந்து நடத்திய அற்புத அறிவியல் கட்டுரைப் போட்டியில் மூன்றாம் (1) பரிசு பெற்ற கட்டுரை

* சாளக்கிராமம்
நேபாளம் ஆன்மிக / சமய ரீதியாக இந்தியாவோடு நெருங்கிய நாடு.

* சரித்திரப் பதிவுகள்: புகையிலை வியாபாரி
குபாச்சி நகருக்கு முதல் முதýல் புகையிலையைக் கொண்டு வந்தவர், ஒரு துருக்கியர்

* அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் எண்கணித ஜோதிடம்
நூலாசிரியர்: ஸ்வாமி

* மீண்டும் பிறந்த கோபி மீரா
ராஜபுதனத்து மார்வாரில் ஓர் அரண்மனை. உப்பரிகையிýருந்து கீழே பார்த்துக் கொண்டிருந்தாள் அச்சிறுமி.

* கற்சிலைகளின் மர்மம்!
உலகிலேயே தன்னந்தனியான சின்னத் தீவு!

* “காபுலி வாலா” – தாகூர்
சென்ற இதழில் சுபத்ராகுமாரி செüகான் எழுதியிருந்த ஹீங்வாலா (பெருங்காயக் காரன்) கதையைப் படித்து வாசகர்கள் மகிழ்வோடு கடிதம் எழுதியிருந்தனர்.

* மகளிர் முன்னேற்றத்திற்கு இங்கே ஓர் வழிகாட்டி
“”பெண்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்; பெண்கள் சளைத்தவர்கள் அல்லர், அதிலும், உழைப்புக்கு அஞ்சாதவர்கள் எந்தச் செயலானாலும் செய்ய முடியும், அதற்கு வேண்டியது துணிவுதான்”

* சரித்திரக் கதை: ரேஷன் திருட்டு
ஒரு நாள் பிற்பகல் ஜஹாங்கீரும் நூர்ஜஹானும் சதுரங்கம் ஆடிக் கொண்டிருந்தார்கள்

* மதிப்புக் கூட்டு வரி எதிர்ப்பு ஏன்?
ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்படவுள்ளதாகக் கூறப்படும் மதிப்புக் கூட்டுவரி, தற்போது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

* நிற்காமல் ஓடும் எக்ஸ்பிரஸ்!
அவன் படித்த பள்ளியில் பழைய மாணவர்கள் ஒன்று கூடும் விழா நடந்துகொண்டிருந்தது. போங்கு விருந்துக் கூடத்தில் அமர்ந்து சக மாணவர்களுடன் உணவருந்திக் கொண்டிருந்தான்

* ப்ரமர கீதம்
ஸ்ரீகிருஷ்ணனுடைய லீலைகள் அநேகம். குழந்தைப் பருவத்திலிருந்தே அவனுடைய லீலைகள் எல்லோரையும் கவர்ந்து விட்டன

விஜய்

ஜூனியர் விகடன்:

கேள்வி: “இளைய தலைமுறையினருக்கு ஏதாவது கருத்துச் சொல்லுங்களேன்…?

“கருத்து சொல்ல நான் கந்தசாமி இல்ல. நம்ம ஒவ்வொருத் தருக்கும் ஏதாவது ஒரு திறமையை இறைவன் எழுதி வைத்திருப்பான். அதை எப்படியாவது வெளிப்படுத்தி நாம முன்னேறிக் காட்டணும், அவ்வளவுதான்” என்றார்

கேள்வி: “அரசியல் ஆசையில்லாவிட்டால், அப்புறமேன் இப்படியான திருமணங்களை எல்லாம் நடத்தி வைத்து ஸ்டன்ட் அடிக்கிறீர்கள்?

“நீங்கள் நினைப்பது போல் பாலிடிக்ஸுக்காகவோ, பப்ளிசிட்டிக்காகவோ நான் 18 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கவில்லை. எனக்கு வித்யா என்றொரு தங்கை இருந்தாள். மூன்றரை வயதிலேயே எதிர்பாராதவிதமாக அவள் இறந்து போய் விட்டாள். உயிரோடு இருந்திருந்தால் இந்நேரம் அவளுக்கு திருமணப் பருவம் வந்திருக்கும். ராஜா வீட்டுக் கல்யாணம் போல் அவளுடைய மணவிழாவை நடத்தி இருப்போம். ஆனால், அதற்கு எங்களுக்கு கொடுப்பினை இல்லாமல் போய்விட்டது. எங்களின் மனக்குறைக்கு மருந்து போடுவதற்காகவே ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தோம். அதன்படியே என் தங்கைகளாக எண்ணித்தான் 18 பெண்களுக்கும் திருமணங்களை நடத்தி வைத்தேன். மற்றபடி இதற்கு வேறேதும் காரணமில்லை”

நீங்கள் இன்னும் இந்தியரா?

இந்த மாதிரி பட்டியல்கள் அவ்வப்போது மின்மடலில் வரும். நான் செய்து, நடுவில் மாற்றிக் கொண்டு, மீண்டும் அவ்வப்போது செய்கின்ற சில பிறவி குணங்கள்:

* மீசையை இன்னும் மழிக்காதது

* கட்டம் போட்ட ‘ஒன்லி விமல்’களுடன், Flying Machine போட்டுச் செல்வது.

* மவுண்ட் ரஷ்மோர், வாஷிங்டன் நினைவுச் சின்னம் என்று எங்கு சென்றாலும் தேவைக்கேற்ப ஜூம் (வார்த்தை உபயம்: ‘கஜேந்திரா’ விஜய்காந்த்) செய்து குடும்பத்துடன் படங்கள் எடுத்து வைத்துக் கொள்வது.

* அரைக்கால் சட்டை போடும்போது காலுறைகளை மடக்கி விட்டுக் கொள்ளாதது; கறுப்புக் காலணிக்கு வெள்ளை வெளேர் காலுறை போட்டுக் கொள்வது.

* இயந்திரகதியில் ‘தாங்க்ஸும்’, ‘யூ ஆர் வெல்கமு’ம் சொல்ல மறப்பது.

(கொஞ்சம் outdated என்றாலும்) முழுப் பட்டியலுக்கு இங்கு செல்லவும். #44 முக்கியமானது ;-))

சன் டிவி

வீட்டில் இருந்தால் சன் டிவியில் பார்க்க நினைக்கும் சில நிகழ்ச்சிகள்:

1. சென்ற வார உலகம் – சனி இரவு

2. சிதம்பர ரகசியம் – புதன் இரவு

3. மெட்டி ஒலி – வாரநாள் இரவுகள் (வாரத்தில் ஒரு நாள்)

4. நீங்கள் கேட்ட பாடல் – ஞாயிறு மதியம்

5. சன் செய்திகள்

6. சூப்பர் டென் பாடல்கள் – செவ்வாய் இரவு

7. டாப் டென் மூவீஸ் – ஞாயிறு காலை

8. நம்ம நேரம் – சனி மதியம்

9. திரை விமர்சனம் – வெள்ளி மாலை

10. புத்தம் புதுசு – வாரநாள் இரவுகள் (மாதத்தில் ஒரு நாள்)

11. நடித்ததில் பிடித்தது – சனி மாலை

12. வணக்கம் தமிழகம் – தினசரி காலை

13. ஆடுகிறான் கண்ணன் – வாரநாள் மதியம் (முடிந்துவிட்டது)

14. கல்யாண மாலை – ஞாயிறு காலை

15. நினைவுகள் – சனி மாலை

16 நட்சத்திரம் – சனி காலை