Daily Archives: பிப்ரவரி 4, 2005

Pooja – Jay Jay & Attagasam 

Pooja – Jay Jay & Attagasam Posted by Hello

Madurai Thamizh Peragarathi – Dictionary in Tamil …

Madurai Thamizh Peragarathi – Dictionary in Tamil Posted by Hello

Don’t Worry Be Happy! 

Don’t Worry Be Happy! Posted by Hello

Tamarin Monkey 

Tamarin Monkey Posted by Hello

Daily Thanthi – Word Games 

Daily Thanthi – Word Games Posted by Hello

Kanji Mutt – Police 

Kanji Mutt – Police Posted by Hello

பதினைந்து – இராணுவ வீரன் – குறும்படம்

கல்கி: ஜவான்கள் சிலர் பயணம் செய்த ரயில் பெட்டியில் ஐந்து பேர் ரிசர்வேஷன் இல்லாமல் ஏறியிருக்கிறார்கள். இந்த ஐந்து பேரையும் ரயிலிலிருந்து பலவந்தமாக வெளியே தள்ளியிருக்கிறார்கள் அந்த ஜவான்கள். பக்கத்தில் ஓடிய தண்டவாளத்தில் அவர்கள் விழ, விரைந்து வந்துகொண்டிருந்த மற்றொரு ரயில் அவர்களை அரைத்துக் கொன்றுவிட்டது!

குடிமக்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய ராணுவ வீரர்கள்தான் இவ்வாறு அரக்கத்தனமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். பிளாட்ஃபாரத்திலாவது அந்தப் பயணிகளை இறக்கி விட்டிருக்கக் கூடாதா? மனித உயிர்களைத் துச்சமாக மதிக்கும் போக்கு அதிகரித்துவிட்டது!

ஆந்திராவில் ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ் முதல்வர், காவல் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் தமது மகனின் பெயர் இடம் பெற்றிருக்கிறது என்று தெரிந்ததும் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற சம்மதித்திருக்கிறார்.ஆறாம்திணை — ஏகலைவன்: சமீப காலங்களாக குறும்படத்திற்கான வீச்சு தமிழ்சூழலில் அதிகமாகக் காணப்படுகின்றன. சூல் குறும்பட அமைப்பும், இண்டர்நேஷ்னல் சினி அப்ரிசியேஷன் ஃபாரமும் இணைந்து நடத்திய குறும்பட திரையிடலில் அந்த வீச்சை கண்கூடாகக் காண முடிந்தது. திரைப்படச் சங்கங்கள் தமிழ்ச் சூழலில் முதன் முதலாக குறும்படத்தை மட்டும் திரையிடத் துவங்கியிருக்கிறது. இது ஒரு நல்ல துவக்கமாக அமைந்திருக்கிறது. இந்த குறும்பட விழாவில் அடையாளம் (அம்ஜத் மீரா அகிலன்), பரமபதம் (பிரபு ராதாகிருஷ்ணன்), பஞ்ச(ம்)பூதம் (முத்துக் குமார்), நானும் (மாமல்லன்), கலர்ஸ் (விஜய் சங்கர்) என்கிற ஐந்து குறும்படங்கள் திரையிடப்பட்டன.

பரமபதம் ஒரு இளைஞனது தேடலைச் சொல்கிறது. ஒரு அறிவு ஜீவிக்கான தோற்றத்துடன் இருக்கிற அந்த நபரின் தேடல் இறுதியில் காமத்தில் அடங்கி விடுகிறது. அவனது தேடல் எதுவென்று தெளிவாகச் சொல்லாமல் காமத்திலேயே அடங்கிப் போவதாக காட்டியிருக்கிறது. பஞ்ச பூதத்தில் தண்ணீர் வருவதற்கான குறியீடாக பிரசவ வேதனையைக் காட்டுகிறது. இந்த ஐந்து படங்களில் பிந்தைய இரண்டு படங்கள் பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்தது. ஒன்று பார்வையற்ற குழந்தையின் நிறத்திற்கான தேடல். கலர்ஸ் என்கிற இந்தக் குறும்படம் தமிழ்ச் சூழலில் ஒரு மிகச்சிறந்த முயற்சியாகவே எனக்குப் படுகிறது

இந்த விழாவில் பெரிதும் ஈர்த்த, பாராட்டுப் பெற்ற மாமல்லனின் ‘நானும்’ என்கிற குறும்படம் மிக அதிக கரகோஷம் பெற்றது.

உதவி இயக்குநராக சேர வந்து இரண்டு வருஷம் கோடம்பாக்கத்தில் இருந்து மோதிவிட்டு சொந்த ஊருக்கு போய் விடுகிறான். பின்னர் மீண்டும் அசோக் நகரில் இருக்கும் தன் சக உதவி இயக்குனர் நண்பனை தேடி வருவதில் படம் தொடங்குகிறது. மீண்டும் தன் பழைய இயக்குனரை தேடிப்போய் வாய்ப்பு கேட்கிறான். காத்திருக்கும் நேரத்தில் வயிற்று வலி எடுத்து மலம் கழிக்க முடியாமல் அவதியுறுகிறான். மீண்டும் சென்று இயக்குனரை பார்க்கும்போது, அவர் திட்டி அனுப்பிவிடுகிறார். சோர்வுற்றிருக்கும்போது அறை நண்பன் அழைத்துச் சென்று சாப்பாடு வாங்கிக் கொடுத்து, தீர்த்தமும் நடக்கிறது. அறை நண்பன் ‘மப்பில்’ சினிமாவின் யதார்த்தத்தை விவரிக்கிறான். ‘நல்லபடம்’ என்பது இங்கு முக்கியமல்ல. வியாபாரம் தான், ஜெயித்துக் காட்டுவதுதான் முக்கியம். இன்றைய சினிமா உலகத்துடன் சமரசம் செய்து கொள்’ என்கிறான். இவனும் அவனைப் போலவே மாறி எப்படி சினிமாவில் கரைகிறான் என்பதோடு படம் முடிகிறது.தினத்தந்தி: அருகே உள்ள கட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ள எழுத்துகளை எப்படியும் பயன்படுத்தலாம். ஆனால் குறைந்தது 15 தமிழ் வார்த்தைகளையாவது கண்டுபிடிக்க வேண்டும்.

(உதாரணமாக :கூட்டணி, ஆடு…) அதிக வார்த்தைகளை கண்டுபிடித்து எழுதுபவர்களுக்கு ரொக்கப் பரிசு ரூ. 500 வழங்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட வாசகர்கள் சரியான விëடை எழுதி இருந்தால் அவர்களுக்கு பரிசு தொகை பகிர்ந்து அளிக்கப்படும். விடைகளை எழுதி தபால் கவரில் வைத்து ஒரு வார காலத்துக்குள் அனுப்ப வேண்டும்.