ப்ளாக் ஃப்ரைடே


முதல் வாசிப்பிலேயே புரியவைத்து அசைய வைக்கும் புத்தகங்களின் மேல் எனக்கு கொள்ளைப் பிரியம் ஏற்படும். காட்டாக பாரா-வின் ‘புவியிலோரிடம்’, இ.பா.வின் ‘குருதிப்புனல்’, சுஜாதாவின் ‘கனவுத் தொழிற்சாலை’ என்று சொல்வேன். இவற்றை மீண்டும் படிக்கும்போதும் வெவ்வேறு உணர்வுகள், விரிவுகள் கிடைக்கிறது.

இசையில் இத்தகைய அனுபவத்தை முதன்முதலில் கொடுத்தது ஏ.ஆர்.ஆரின் ‘ரோஜா’, சின்னச் சின்ன ஆசை கேட்டவுடன் மிதந்து செல்வது போன்ற தோற்றம். அடுத்து ‘ருக்குமணி’யில் துள்ளல். ‘வெள்ளை மழை’யில் டபுள் மீனிங்ஃபுல்லான பாடல். இன்றும் பிரியமானவளைப் எங்கவது மிஸ் செய்தவுடன் ஒலிக்கும் ‘காதல் ரோஜாவே’.

இத்தகைய சிலீர் அதிரடி அனுபவத்தை ‘இந்தியன் ஓசிய’னின் ‘ப்ளாக் ஃப்ரைடே’ கொடுக்கிறது.

இந்தியன் ஓசியனையும் எனக்கு கல்லூரிதான் அறிமுகம் செய்தது. சேர்ந்திருந்த முதல் வருடம். ஐந்து நாள் கலைவிழா. பாலைவனத்தில் நடப்பதால் Oasis (கானல்?) என்னும் பொருத்தமான பெயர். ஐம்பது ரூபாய் நுழைவு கட்டணம் ‘டூ மச்’ என்று தோன்றினாலும் வாங்கிக் கொண்டு சென்றேன். முதலீடு செய்த ஒவ்வொரு அணாவிற்கும் நிகர மகிழ்ச்சி கொடுத்த நிகழ்ச்சி. அன்று கவர ஆரம்பித்த இசையை, ‘கறுப்பு வெள்ளி’யின் மூலம் அடுத்த படிக்கு கொண்டு செல்கிறார்கள்.

Bandheh – ஆத்மரூபம்

Badshah In Jail – படிப்பது பாகவதம்; இடிப்பது பெருமாள் கோவில்

Bharam Bhaap Ke – ஊழ் மருட்டுதல்

Opening Pre Blast – புல்லாங்குழல் பூனையின் ருத்ர தாண்டவம்

Bomb Planting – சத்தமில்லா சிலிர்ப்பு

Memon House – மதுரமான ஒயில் ஓடை

Rdx – தாலாட்டு இழப்புகள்

Training – கண்ணிவெடிகளின் விபரீத அழைப்பு

 • பாடல்களைக் கேட்க: Raaga – Audio

 • தயாரிப்பாளரின் பதிவு: Mid-Day :: Indian Ocean

 • உருப்படியான விமர்சனம்: சிஃபி

 • மற்றொரு ரசிக்கத்தக்க அறிமுகம்: Black Friday

  அவசியம் வாங்கி கேட்க வேண்டிய பாடல்கள்.

 • 2 responses to “ப்ளாக் ஃப்ரைடே

  1. தகவலுக்கு நன்றி

  2. கேட்டுவிட்டு சொல்லுங்க…

  மறுமொழியொன்றை இடுங்கள்

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

  Google photo

  You are commenting using your Google account. Log Out /  மாற்று )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

  Connecting to %s

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.