குருதிப்புனல் (நாவல்)


முன்னுரை – இந்திரா பார்த்தசாரதி

தமிழில் சாஹித்ய அகாடமி பரிசு பெற்ற இந்நாவல், வங்க மொழியில் ஆக்கம் பெற்றது. மொழி பெயர்ப்புக்காகச் சாஹித்ய அகாடமி பெற்றிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்க விஷயம். மொழிபெயர்த்தவர் கல்கத்தா சு. கிருஷ்ணமூர்த்தி.

இந்நாவல் வெளியானபோது, பல விவாதங்களுக்குள்ளானது. கீழ்வெண்மணிச் சம்பவத்தைக் கொண்டு எழுதப்பட்ட இந்நாவலை மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் தாக்கி எழுதினார்கள். கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றது. ஆனால் கேரள் மார்க்ஸியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகை ‘தேசாபிமானி’ இந்நாவலை மலையாளத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டது.

‘நாவலாசிரியரின் ஃப்ராயிட் அணுகுமுறை, விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தி விட்டது’ என்று தமிழக மார்க்ஸியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தைக் கேரள, வங்காள மார்க்ஸியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் இந்நாவலைப் பற்றிய ஒரு செய்தி.

ஓர் உண்மைச் சம்பவத்தை ஆதாரமாகக் கொண்டு ஒரு படைப்பாளி எழுதும்போது அவன் சம்பவங்களை உள்வாங்கிக் கொண்டு சம்பவங்களின் தீவிரத்தை மலினப் படுத்தாமல், அவன் கற்பனைக்கேற்ப புதினம் உருவாக்குவதில் தவறேதுமில்லை என்பதுதான் என் கருத்து.

காரல் மார்க்ஸின் ஆதர்ச எழுத்தாளர் ஷேக்ஸ்பியர் என்பது தமிழக மார்க்ஸிஸ் கம்யூனிஸ்ட்காரர்களுக்கு ஏன் தெரியாமல் போயிற்று என்பதுதான் என்னுடைய ஆதங்கம்.

அணமையில் தமிழக மார்க்ஸியக் கட்சி இந்நாவலை அப்பொழுது எதிர்த்தது தவறுதான் என்று ஒப்புக் கொண்டிருப்பது மகிழ்ச்சி தரும் செய்தி.

இந்நாவல் ஆங்கிலத்தைத் தவிர ஐந்து இந்திய மொழிகளில் (ஹிந்தி, பெங்காலி, குஜராத்தி, ஒரியா, மலையாளம்) மொழி பெயர்ப்பாகி உள்ளது.

ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் அமரர் கநா சுப்ரமணியன்.

குருதிப்புனல் – ரூ. 85/- : கலைஞன் பதிப்பகம்

Advertisements

5 responses to “குருதிப்புனல் (நாவல்)

 1. இதை ஜெமினியின் மகள் ஜீஜீயைக் கல்யாணம் செய்த ஸ்ரீதர்ராஜன் கண்சிவந்தால் மண்சிவக்கும் என்று ராஜேஷ், பூர்ணிமா (பாக்கியராஜ்) ஆகியோரை வைத்து 80 களில் எடுத்தார். கதாநாயகி இல்லாமற் தமிழ்ப்படம் ஓடாது என்பதால், ஓர் ஆண்பாத்திரம் தேய்ந்து பெண் பாத்திரமாகப் பூர்ணிமையானது 🙂

 2. “மனிதா மனிதா…
  இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்

  பசியாற் பல
  ஏழைகள் சாவது என்பது
  தேசியமானதடா

  இனி
  தேன்வரும் என்பதும்
  பால்வரும் என்பதும்
  ஜோசியமானதடா

  அட..
  சாமரம் வேசிய
  பாமர ஜாதிகள்
  சாதனை கண்டுவிடும்”

  என்னும் பாடல் மட்டுமே ஆழப் பதிந்திருக்கிறது. நாவல் வெகு அருமை!

 3. நான் இயக்குனர் ஸ்ரீதர் படத்தில் ஒரு வக்கீல்
  வேடத்தில் நடித்திருக்கிறேன். இயல் வாழ்க்கையில் ஒரு இடதுசாரி வக்கீலாக ஆரம்பித்து திராவிட கழக வக்கீலாகி … எல்லா
  கட்சிகளும் தனிமனிதனுக்காக இரண்டாவதையும் எங்கள் குடும்ப உறுப்பினர்களும் தனிமனிதனுக்காக இரண்டாக
  ஆவதையும் ஒப்புக்கொண்டவன் ….. இதற்குமேல் எதையும் ஆராய முன் வருபவர்கள் என் ஈ மெயிலில் தொடர்பு கொள்ளலாம் சாருஹாஸன்

 4. Pingback: இந்திரா பார்த்தசாரதி என்னும் புலியும் விமர்சக குடிகளும் | Snap Judgment

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.