நேயர் விருப்பம்


சூரியன் எப்.எம்மை கூப்பிடலாமா அல்லது ரேடியோ மிர்ச்சியை அழைக்கலாமா என்று சிந்தனையில் இருக்கிறார் சிறையில் வாடும் ஜெயேந்திரர். அவர் கேட்க நினைக்கும் பாடல்:

“ஆட்டுவித்தால் யாரோருவர் ஆடாதாரே கண்ணா

ஆசையென்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா”ஜயேந்திரரும் விஜயேந்திரரும் பேசிக் கொண்டால்

(ஜயேந்திரர்:) “சக்கை போடு போடு ராசா…

உன் காட்டிலே மழை பெய்யுது

(விஜயேந்திரர்:) டேய்… என்னடா பாட்டில பேச ஆரம்பிச்சுட்டே

ஆமா… மழை பெய்யுது… நீ வந்து குடை பிடி..”ஜெயலலிதாவை தொலைபேசியில் கூப்பிட்டு காத்திருக்கும்போது ஒலிபரப்பப்படும் கீதம்:

“கனவுகளே கனவுகளே காலமெல்லாம் வாரீரோ

நினைவுகளே நினைவுகளே நின்று போக மாட்டீரோ?”ஜெயலலிதாவுக்காக ஜெயேந்திரர் ஒலிபரப்ப கேட்கும் பாடல்:

“பகாவலி நாட்டிலே பகாவலி ஆட்சியிலே

நியாயமாய் வாழவும் வழியுமில்லையே

இது அநியாயம் அநியாயம்

இங்கே ஆண்களைப் பெண்கள் அடிமையாக்கும் அநியாயம்”ஜூவியும் நக்கீரனும் போட விரும்பும் பாடல்:

“நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்

உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்”சிவகாசி ஜெயலட்சுமிக்கு ஜெயேந்திரர் அர்ப்பணித்த பாடல்:

“மாப்பிள்ளைய பார்த்துக்கடி மைனாக்குட்டி

எனக்கு மந்திரத்தச் சொல்லிப்புடு நைசா தட்டி”ஜெயிலர் ரிலாக்ஸ் செய்ய கேட்கும் பாடல்:

“வரதப்பா வரதப்பா கஞ்சி வரதப்பா

எங்கப்பா..?”தமிழ்ப்பாடல்களில் திடீர் ஆர்வம் காட்டும் அத்வானி கேட்க விரும்பிய பாடல்:

“அவரா செய்தார் இருக்காது… அப்படி எதுவும் நடக்காது…

நடக்கவும் கூடாது… நம்பமுடியவில்லை இல்லை… இல்லை!”விஜயேந்திரர் விரும்பிக் கேட்ட பாடல்:

“சுமைதாங்கி சாய்ந்தால் சுமை என்ன ஆகும்”விஜயேந்திரர் மனதுக்குள் முணுமுணுத்த பாடல்:

“நீயும் நானுமா

கண்ணா… நீயும் நானுமா”ஜெயலலிதா மனதுக்குள் முணுமுணுத்த பாடல்:

“முத்து நகையே உன்னை நானறிவேன்

கத்துங்கிளியே என்னை நீயறிவாய்

நம்மை நாம் அறிவோம்”கலைஞர் பெப்ஸி உமாவின் ‘ஜெயச்சந்திரன் உங்கள் சாய்ஸை’க் கூப்பிட்டு ஜெயேந்திரருக்காக பாடல் வழங்குகிறார்:

“ஆறு மனமே ஆறு

அந்த ஆண்டவன் கட்டளை ஆறு”சங்கர்ராமன்:

“சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா

துக்கமில்லாமல் வெட்கமில்லாமல் வாழுகிறேன் ஒரு பக்கமடா”எல்லாவற்றையும் பார்க்கும் பொதுஜனம்:

“யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்

அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்”எல்லாவற்றையும் படிக்கும் இணையஜனம்:

“ஒண்ணுமே புரியலே உலகத்திலே

என்னமோ நடக்குது மர்மமா இருக்குது”கடவுளும் ஜெயேந்திரருக்காக தனக்குப் பிடித்த பாடலை போஸ்ட்கார்டில் ஓல்ட்-பேஷண்டாக விவிதபாரதிக்கு அனுப்புகிறார்:

“நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் இரண்டு

ஒன்று மனசாட்சி

இன்னொன்று தெய்வத்தின் சாட்சியம்மா”கடவுள் பொதுமக்களுக்காக விரும்பிக் கேட்ட பாடல்:

“தம்பிக்கு ஒரு பாட்டு

அன்புத் தங்கைக்கு ஒரு பாட்டு

வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு உதவும்

நான் சொல்லும் கதைப்பாட்டு”

-பாஸ்டன் பாலாஜி

7 responses to “நேயர் விருப்பம்

 1. அத்வானியும் பொதுஜனமும் நல்ல சாய்ஸ்:-))

 2. இந்தப் பதிவைப் பார்த்து எங்களுக்குள்:

  சிரிப்பு வருது சிரிப்பு வருது
  சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது..

 3. ஐயா சிவாஜி ரசிகரோ?

 4. கலக்கல் பாபா!

  இவுங்களுக்கெல்லாம் சேத்து வச்சி தலைவர் படத்துல அன்னிக்கே பாடிட்டாரு!

  சந்தோஷி சந்தோஷி சந்தோஷி நீ சந்தோஷம் (கொன்றாடும்) சன்யாசி. மாயா மாயா எல்லாம் மாயா

 5. பேயர் விருப்பம்;
  கொலை செய்யப்பட்ட சங்கர் ராமன் , அவரது மனைவியை பார்த்து பாடுவது:
  “எங்கிருந்தாலும் வாழ்க” ? 🙂

 6. நான் டி.எம்.எஸ் தொண்டன். (அப்புறம் கொஞ்ச நாள் கழித்து எஸ்.பி.பி அடிப்பொடியாகி, இப்பொழுது மாணிக்க விநாயகம் ரசிகனாகி இருக்கேன் 🙂

  கார்த்திக்ராமஸ்: அவங்களை ‘மன்னவனே அழலாமா… கண்ணீரை விடலாமா…’ எனப் பாட வைக்காத வரைக்கும் சரிதான்!

 7. சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது
  சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாத்து சிரிப்பு வருது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.