யாஸர் அராஃபத்


தமிழோவியத்தில் என்னுடைய யாஸர் அராஃபத் குறித்த எண்ணங்கள் அடங்கிய கட்டுரையைப் படிக்கலாம்.

Spiral of Violence II (c) ??Artistஇந்தியா சென்றுவிட்டு களைப்பாக அமெரிக்கா திரும்பியபோதுதான் அந்த நேர்முகம் எனக்கு கிடைத்தது. ட்ரிம் குறுகுறு மீசை, ஒல்லியான உடல், இந்திய முக அமைப்பு கொண்ட வாடகை வண்டி ஓட்டுநர். விமானதளத்துக்கு உள்ளே வர அனுமதி இல்லாததால், பனி பெய்யாத குளிர் இரவில் வெளியில் என் பெயர் தாங்கிய பலகையுடன் காத்திருந்தார். புகழ்பெற்ற அமெரிக்கத் தொலைகாட்சித் தொடர்களான ‘டேக்ஸி கேப் கன்·பஷன்ஸ்’ போன்றவை பார்த்ததாலோ என்னவோ, வழக்கம் போல் பேச்சு கொடுத்தேன்.

டாக்ஸி டிரைவர் பாலஸ்தீன நாட்டவர். குடும்பம் மிகவும் வறுமையில் இருக்கிறது. இன்னமும் மணம் முடிக்கவில்லை. ஒரு நாட்டை குறித்து ‘·பாரின் பாலிசி’, ‘நியு யார்க் டைம்ஸ்’, ‘பிபிசி’ என்று படிப்பதை விட அந்த நாட்டின் குடிமகன்களிடம் அரை மணி நேரம் பேசினால் ஓரளவு தெளிந்த அலசல் கிடைக்கும். நான் இந்தியாவில் இருந்து கிளம்பிய அன்றுதான் ‘ஹமாஸ்’ வீரர் தற்¦காலை செய்து கொண்டு பத்தோ பதினைந்தோ இஸ்ரேலியர்களை விண்ணுலகம் அனுப்பியிருந்தார். ‘தி ஹிந்து’வும், ·ப்ரான்க்பர்ட்டில் இலவசமாக கிடைத்த ‘இண்டர்நேஷனல் ஹெரால்ட் ட்ரிப்யூனும்’ தலைப்புச் செய்திகளுக்கு மிக அருகே செய்தியாக்கியிருந்தார்கள். தலையங்கப் பக்கங்களில் ‘ஹமாஸ்’ எவ்வாறு அரா·பத்தின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தன்னிச்சையாக இயங்குகிறது என்று வருத்தமும் பட்டிருந்தார்கள்.

வழக்கம் போல் ஒரு வரியில் ‘இதெல்லாம் நிற்காதா?’ என்று ஓட்டுநரிடம் வினா விடுத்தேன். பொறுமையாக விளக்க ஆரம்பித்தார். க்ளிண்டன் ஏற்பாடு செய்த உச்சி மாநாடு பற்றி கொஞ்சம் பிண்ணனி கொடுத்தார். அதில் யாஸர் அரா·பத் கையெழுத்திட மறுத்திருக்கிறார். என்ன திட்டம் என்பதை எங்கள் நாற்பததைந்து நிமிட பயணத்தில் பத்து நிமிடம் சுருக்கமாக சொன்னாலும் ஒன்றும் மண்டையில் ஏறவில்லை.

ஆனால், சாராம்சமாக புரிந்து கொண்டது யாஸர் அரா·பத் என்பவர் பாரதப் போரின் கிருஷ்ணன் போல. ‘ஹமாஸ்’ போய் குண்டு வீசி வருகிறதா? ஹமாஸ¤ம் அரா·பத் பேச்சின் படியே செயல்படுகிறது. என் குடும்பம் வறுமையில் இருக்கிறதா? அரா·பத்தின் கொள்¨கப் பிடிப்புதான் காரணம். என்னுடைய அண்ணாவின் மாப்பிள்ளை இஸ்ரேலினால் கொல்லப்பட்டானா? அங்கும் அரா·பத் அரூபமாகத் தெரிகிறார்.

அப்படியிருந்தும் அவனுக்கு அரா·பத் மேல் நம்பிக்கை இருக்கிறது என்று முடித்தான்.

கொலையாளி, தீவிரவாதி, உடும்புப்பிடி கோட்பாடுகள் கொண்ட அரா·பத் ஏன் பிடிச்சிருக்கு என்று நான் அதிகம் கேட்கவில்லை. எங்காவது எசகு பிசகாக கேள்வி கேட்டு, அவன் எங்காவது கடத்திச் சென்று பிணைக்கைதியாக்கி விடுவானோ என்னும் அளவு அவன் பேச்சில் ஆக்ரோஷம் இருந்தது.

தினசரிகளின் மூலம் மட்டுமே அறிந்த ஒரு ஆதர்ச தலைவரை பற்றிய நேரடி வருணனை அது. இந்தியாவிற்கு அடிக்கடி வந்து போகும் தலைவர்; காஷ்மீர் இந்தியாவுக்கே சொந்தம் என்று உலக அரங்கில் அறிவித்த தலைவர்; இஸ்ரேலின் கொடுங்கோலிற்கு அடிபணியாதவர் என்னும் எண்ணம் மட்டுமே என் முன்னே நிலைநிறுத்தப் பட்டிருந்தது. அன்று ‘ஹமாஸ்’ மூலம் கொலைகளும் செய்து வருபவர் என்று சொல்லப்பட்டது.

இந்திரா காந்தி இஸ்ரேலுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டிருந்தால் இந்தியா வெகு சீக்கிரமே சுபிட்சப் பாதையில் சென்றிருக்கும். சகாய விலையில் ராணுவத் தளவாடங்கள், பாகிஸ்தானின் அத்துமீறலகளை எளிதாக கண்காணித்தல் போன்ற தொழில் நுட்பங்கள் கிடைத்திருக்கும். வளைகுடா நாடுகளுடன் நல்லுறவு பாவித்ததில் பெட்ரோல் விலையும் குறையவில்லை; இன்றளவில் த¡வூத்தும் நாடுகடத்தப் படவில்லை.

இறந்த பிறகு ஒருவரை தூஷிப்பதை பலரும் விரும்புவதில்லை. வீரப்பனே ஆனாலும், ‘அவனுக்குள்ளும் ஒரு நல்ல மனிதன் இருக்க¡ன்’ என்று கண்டெடுத்து அவற்றைப் பெரிதாக சொல்வதே உவப்பாக உள்ளது. ஒஸாமாவிற்கு ரோல் மாடல் யார் என்பதை நமக்குத் தெரியாது. யாஸர் அரா·பத்தாக இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

ஏதன்ஸ் ஒலிம்பிக்ஸில் பாதுகாப்புக்கு கிட்டத்தட்ட ஒன்றரை பில்லியன் (மில்லியன் அல்ல) டாலர் செலவு செய்யப்பட்டிருக்கிறது. ஏறக்குறைய 6,750,000 கோடி ரூபாய். இவ்வளவுக்கும் பிள்ளையார் சுழி போட்டது 1972 ஒலிம்பிக்ஸில் நடந்த பதினொன்று இஸ்§ரலிய வீரர்களின் படுகொலை. தொடர்ந்து 1973-இல் சூடானின் அமெரிக்க வெளியுறவுத் துறையினரின் மரணங்கள், 1974-இல் இரண்டு டஜன் இஸ்ரேலிய பள்ளிச் சிறுவர்களின் கொலை, 1985 விமான கடத்தல் என்று பல நிகழ்வுகள் மூலம் பாலஸ்தீன பிரச்சினையை மக்கள் மனதில் இருத்தி வந்திருக்கிறார்.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்குமான விவகாரத்தை அமெரிக்காவும் மற்ற நாடுகளும் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். ஒன்றரை பில்லியன் டாலருக்கு மேல் பாலஸ்தீனத்துக்கு நன்கொடையாக அமெரிக்கா வழங்கி வருகிறது. வெஸ்ட் பேங்க், காஸா போன்ற பகுதிகளில் உள்கட்டமைப்பு, நீர்வளம், கல்வி, சுகாதாரம் போன்ற பல துறைகளில் செயல்படுத்தி இருக்கிறார்கள்.

தனது பதவிக்காலம் முசிவதற்குள் முழுமையான தீர்வு ஏற்பட வேண்டும் என்று க்ளிண்டன் பெரிதும் விரும்பினார். இஸ்ரேல் ஒப்புக் கொண்ட திட்டத்தை பாலஸ்தீனத்துக்கு தீவிர ஆதரவு தரும் எகிப்து, சவுதி அரேபியா, ஜோர்டான், மொரோக்கோ, டூனிஸியா போன்ற நாடுகளின் ஆசீர்வாதங்களுடன் யாஸர் அரா·பத்திடம் சமர்ப்பித்தார். வசனம் பேசி மகிழும் சில தமிழக அரசியல்வாதிகள் பே¡ல் ஒரு கையில் சமாதானச் சின்னமும் மற்றொரு கையில் துப்பாக்கியும் கொண்டு தோன்றிய ஐ.நா. பேச்சு புகழ் பெற்றது. ஆனால், சமாதான உடன்படிக்கை எதையும் ஏற்றுக் கொள்ளாமல் கடைசி வரை சிறுவர்கள் முதல் பெண்டிர் வரை துப்பாக்கி தூக்குமாறு பாலஸ்தீன தலைவர் கட்டளையிட்டார். ‘அவர் சொல்படியே நடப்போம்’ என பட்டும்படாமல் மற்ற நாடுகளும் ஒதுங்கிக் கொண்டு விட்டது.

இப்பொழுது யாஸர் அரா·பத் மறைவிற்குப் பிறகு சில புதிய வழிகள் தென்படலாம். பிற அண்டை நாடுகளுக்கு பாலஸ்தீனத் தலைவர்களை வலியுறுத்தும் துணிவு வரலாம். விட்டுக் கொடுத்து லாபம் பெறுவது குறித்து பாடங்கள் நடத்தலாம். சொந்த நாடாக இயங்குவதின் லாப நஷ்டங்களை மக்களிடம் நேரடியாக எடுத்துரைக்கலாம். பலமிக்க ஒரே ஒரு சர்வாதிகாரிக்கு பதிலாக, ஜனநாயக முறையில் ஆயிரம் தலைவர்களைத் தேர்தெடுக்கும் வலிமையினை உணரலாம். எகிப்து, ஜோர்டானுடன் எல்லைக்கோடுத் தொடர்பு கொண்ட சுதந்திர நாட்டை உருவாக்கலாம்.

தேர்தல் மற்றும் சுதந்திரம் மட்டும் பாலஸ்தீனப் பிரச்சினைக்கு தீர்வு கொண்டு வராது. இதயநோய் உள்ள ஒருவனுக்கு கண்ணில் தூசி விழுந்திருக்கிறது. தூசி மட்டுமே இந்த க்ஷணம் பெரிதாகத் தோன்றும். கண்ணில் உறுத்தும் தூசியை ஊதித் தள்ளிவிட்டால் உலகமே தெளிந்தது போன்ற பார்வை கிட்டும். ஆனால், தூசி பெரிதல்ல. இதயநோய்க்கு வேண்டிய உணவுக் கட்டுப்பாடுகளும், மாற்று வால்வுகளும் அதி முக்கியம்.

பாலஸ்தீனத்தில் தூசியாக இருப்பது இஸ்ரேல். இஸ்ரேலை அழிப்பதால் பாலஸ்தீனத்துக்கு எவ்வித நனமையும் கிடைக்காது. இதய நோயான தீவிரவாதம், வகுப்புவாதம், பொருளாதாரப் பின்னடைவுகள், போன்றவற்றை குணப்படுத்த வேண்டும். புதிய தலைவர்கள் உணர்ந்து செயல்படுவார்கள். இனி அவர்களை வழிநடத்தப் போவது யாஸர் அரா·பத்தின் பிடியில் சிக்கியிராத மக்கள்தானே ?

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s