Daily Archives: நவம்பர் 9, 2004

appusami.com

அழைப்பிதழ் தலைவலிகள்ரா கி ரங்கராஜன்:

நான் பணியாற்றிய இடத்தில், அச்சகத் தொழிலாளி ஒருவரின் மகளுக்குத் திருமணம். நேரில் பத்திரிகை கொடுத்து அழைத்தார். ஒரு நண்பருடன் நான் போயிருந்தேன். நண்பரிடம் ரகசியமாக, ‘என்ன கொடுக்கலாம்’ என்று கேட்டேன். அவர் என் காலை ஒரு மிதி மிதித்து, ‘கம்மென்றிருங்கள். இவர்கள் வீட்டுக் கல்யாணத்திற்கு நாம் வந்ததே இவர்களுக்குப் பெரிய கெளரவம். எதுவும் தர வேண்டாம்,’ என்றார். கொடுப்பதாக இருந்த பத்து ரூபாயைப் பையில் திரும்பப் போட்டுக்கொண்டு, தொழிலாளி அன்புடன் நீட்டிய கூல்டிரிங்க்கைக் குடித்துவிட்டுத் திரும்பினேன்.

அடுத்த மாதம், ஏவி.எம். சரவணனின் வீட்டுக் கல்யாணத்திற்குப் போக வேண்டியிருந்தது. அதே நண்பருடன் செல்கையில், அதே ரகசியக் குரலில், அதே கேள்வியைக் கேட்டேன். ‘கம்மென்றிருங்கள். இவ்வளவு பெரிய கல்யாணத்தில், இவ்வளவு பெரிய மனிதர்கள், இவ்வளவு பெரிய பரிசுகளுடன் வந்திருக்கும்போது, நாம் என்ன கொடுத்தாலும் எடுபடாது’ என்றார்.

அப்போதும் பேசாமலே திரும்பிவிட்டேன். ஆனால் அதன்பிறகு அந்த நண்பருடன் எந்தத் திருமண விழாவுக்கும் போவதில்லை. தோன்றிய இடத்துக்குப் போகிறேன். தோன்றியதைக் கொடுக்கிறேன். வந்து விடுகிறேன்.உபாத்தியர்கள்தேவன் :

சாதாரணமாக மாணவர்கள் எழுதும் கட்டுரைகளில் பெரும் பகுதியும் உபாத்தியாயர்களைப் பரிகசிப்பதாகவே இருக்கின்றன. இதற்கு முக்கிய காரண உபாத்தியாயர்களை ஆதரித்து, அவர்கள் கஷ்ட நிஷ்டூரங்களைச் சரிவர எடுத்துச் சொல்ல ஒருவரும் முன்வராமைதான். அவர்களைப் பூராவும் ஆதரித்துப் பேச நான் சக்தியற்றவனாக இருந்த போதிலும் மேற்படி பிராம்மணனின் மோர்க் குழம்பு வரிசையையாவது கைக்கொள்ளச் சித்தமாக இருக்கிறேன்.

மேலும் உபாததியாயர் ஒருவர். எதிரில் உட்காருபவர் ஐம்பது பேர். அவர் உங்களைப் பற்றி ஓர் அபிப்பிராயம் கொள்வதற்குள், அவரைப்பற்றி ஐம்பது அபிப்பிராயங்களைச் சொல்கிறீர்களே, இது நியாயமா? ஒருவரைப் பரிகசிப்பதோ, ஏளனம் செய்வதோ மிகவும் இலகுவான காரியம்.

ஆனால், ஒவ்வொரு மாணவனும் தானும் உபாத்தியாயரின் நாற்காலியில் பின் ஒரு சமயம் உட்கார தேரிடலாம் என்று மட்டும் சிறிது சிந்தித்துப் பார்ப்பானானால் உபாத்தியாயர்களிடம் அநுதாபங்கொள்ளாமல் இருக்க முடியாது.கல்கியின் எழுத்துக்கள்முசிரி துகாராம் :

வாழ்க்கையில் கஷ்டத்தை வெறுக்கும் மனிதர்கள் கலைகளில் மட்டும் சோக ரஸத்தை அநுபவிப்பதில் ஏன் இவ்வளவு இன்பமடைகிறார்கள் என்பது சிருஷ்டி ரகசியங்களில் ஒன்று.

துகாராம் பாடி முடித்ததும், ”இந்த ஒரு பாட்டுப் போதுமே!” என்று நான் வாய் விட்டு சொன்னேன். ஆனால், என் குரலின் சப்தம் இவ்வளவு பெரியதா என்று சந்தேகம் தோன்றியது. அப்புறம் விசாரித்தால், ஏக காலத்தில், என் அருகில் இருந்தவர்கள் ஐந்தாறு பேரும் அப்படியே சொன்னார்கள் என்று தெரிந்தது. வாய் விட்டு சொல்லாத இன்னும் இரண்டு மூன்று பேரும் ”நாங்களும் அப்படித்தான் நினைத்தோம்” என்றார்கள்.

மேற்படி பாட்டு குந்தலவராளியில் அமைந்தது. சாதாரணமாய், இந்த ராகத்திலுள்ள பாட்டுக்கள் இங்கிலீஷ் நோட்டுக்கள் போல் தொனிக்கும். ஸ்வரங்களைத் தனித்தனியாகப் பிரித்து உதிர்த்து விடலாம் போல் இருக்கும். அத்தகைய ராகத்தில் இவ்வளவு கமகமும் குழைவும் கொடுத்து இவ்வளவு உருக்கத்தை ஊட்டிப் பாடியிருப்பது முசிரி ஒருவருக்குத் தான் சாத்தியம் என்று சொல்லலாம்.ஷபாஷ் ஷாப்பிங்பாக்கியம் ராமசாமி:

– கணவன்மார் விரும்பும் டெலிபோன்

– குந்தி மா ப்ளாங்கட் (போர்வை)

– வுல்·ப் மேன்ஸ் பவர் பவுடர்

– மாஜிக் ஷெல்·ப்

– மார்பு என்ஹான்ஸனர்

Water Melon Arts – Happy Birthday Flowers – Floris…

Water Melon Arts – Happy Birthday Flowers – Florist Dreams Posted by Hello

Water Melon Arts – Rose Arrangements – Floral 

Water Melon Arts – Rose Arrangements – Floral Posted by Hello

Water Melon Arts – 007 

Water Melon Arts – 007 Posted by Hello

Water Melon Arts – Lotus 

Water Melon Arts – Lotus Posted by Hello

More Andaman Islands 

More Andaman Islands Posted by Hello

Andaman Bridges 

Andaman Bridges Posted by Hello