Monthly Archives: ஒக்ரோபர் 2004

யாருக்கு ஓட்டுப் போடலாம்?

அமெரிக்கத் தேர்தலில் நம்மில் பலருக்கும் வாக்களிக்கும் உரிமை இருக்காது. எனக்கும் கிடையாது. இருந்தாலும் மழைச்சாரல் சொல்லுகிறதே என்று சென்று பார்த்தபோது அருமையான கருத்துக்கணிப்பைப் பார்க்க நேர்ந்தது. தெரிந்த முடிவைத்தான் (புஷ் – 14% / நான் கெர்ரியின் வாக்குறுதிகளோடு 86% சதவீதம் ஒத்துப்போவதாக) சொன்னது.

வழக்கம் போல், நம்மவர்கள் (தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள்) தங்கள் நிலைப்பாட்டை இவ்வளவு தெளிவாக எடுத்துரைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்னும் எண்ணமே வந்து போனது.

நீங்களும் உங்கள் மனதுக்கினிய அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரை அறிந்து கொள்ள: கொள்கைப் பிடிப்பு கருத்துக் கணிப்பு

அக்கடா அன்பே சிவம்

‘உழகின்ற காலத்தில் ஊர் மேல் போயிட்டால், அறுவடை சமயம் என்ன கிடைக்கும்’ என்பது போல, பல நாட்களாக மேலோட்டமாக வேலை பார்த்ததில், தேங்கிப் போன சில வேலைகளும், சவாலான புதிய சில வேலைகளும் இந்த வாரம் தலையைதூக்கி ஆக்கிரமித்துக் கொண்டு விட்டது. நேரமும், நிர்வாகம் போல தன்னிச்சையாக என்னுடைய முடிவுகளை எடுத்துக்கொடுத்தது. ஐப்பசி மாசத்து பௌர்ணமியன்று சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் பார்க்கலாம். இந்த வருடம் சந்திர கிரகணத்தையும் பார்க்க முடியவில்லை. கடந்த அமெரிக்க வருடங்கள் போல் வெள்ளீஸ்வரர் ஆலய அன்னாபிஷேகமும் வழக்கம் போல் செல்ல முடியவில்லை.

இப்பொழுது அன்னாபிஷேகம் பார்க்க சென்றால் வேறு சிந்தனைகள் எழலாம். ‘இவ்வளவு சாதமும் வேஸ்ட்தானே!? இவற்றை இல்லாதாருக்குக் கொடுத்தாலாவது பயன் கிடைக்குமே’ என்று சிந்திக்க வைக்கலாம். கடவுளிடம் முழு ஒப்படைப்புடன் கூடிய சரணாகதி தேவை என்று சொல்லப்பட்டதால் யோசனையே எழுந்ததில்லை. அமெரிக்காவில் புரட்டாசி மாசத்து நிறைமணியும் கிடையாது; ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேகமும் கிடையாது. எனக்குத் தெரியாது எங்காவது இங்கே அன்னாபிஷேகம் நடத்தினாலும் கவலையில்லை. பூஜை முடிந்தவுடன், டின்னர் போஜனத்துக்கு இறைவனுக்கு சாத்திய சோற்றைக் களைந்து, வருகை புரிந்த பக்த கோடி… மன்னிக்க… இருபது பேருக்கு சாப்பிட வைத்துவிட்டு, dogpack-இல் அடுத்த நாளுக்கும் கட்டுசாதமூட்டை கொடுத்துவிடுவார்கள்.

நய்பால் இந்தியாவை குறித்து எழுதிய An Area of Darkness புத்தகத்தில் அன்னக்காப்பு எல்லாம் குறிப்பிடவில்லை. அந்தப் புத்தகத்தை குறித்த என்னுடைய பதிவை தமிழோவியத்தில் படிக்கலாம்.

ஆரம்பித்த இடத்துக்கே மீண்டும் வருகிறேன். வேலை ஒழுங்காக (கவனிக்க: அதிகமாக அல்ல 😉 செய்யும் நாட்களில் என்ன செய்யலாம்? கையில் தோப்பியுடன் ரெட் சாக்ஸ் ஆட்டங்களைப் பார்க்கலாம். ஒருவேளை விளையாட்டுப் போட்டிகள் எதுவும் இல்லாவிட்டால், அல்லது இந்தியா போன்ற என்னுடைய ஆதர்ச அணி தோல்விமுகத்தில் இறங்கினால் Grand Theft Auto போன்ற வீடியோ ஆட்டங்களைக் கையில் எடுக்கலாம். தாறுமாறாக கண்ணில் கண்டவர்களை சுடுவது, காரைத் திருடுவது, போலிஸிடம் இருந்து தப்பிப்பது, பாதி ரோட்டில் வண்டியை அனாதரவாக விட்டுவிட்டு அடுத்த காருக்குத் தாவுவது என்று உள்ளிருக்கும் கிடக்கைகள் தீரலாம். ரெட் சாக்ஸ் ஜெயித்ததற்காக நடக்கும் ரகளைகள் போல் நேரடி அனுபவமாக இல்லாவிட்டாலும், வேறு எவருடைய உயிருக்கும், பொருளுக்கும் சேதம் விளையாது.

சனியன்று பாஸ்டன் பக்கம் வரவேண்டாம். நாளைக்கு நடக்க இருக்கும் பேரணியில் நிச்சயாம் கொஞ்சமாவது ஆங்காங்கே வீடியோ ஆடியவர்கள் நேரில் விளையாடுவார்கள்.

Lunar Eclipse 

Lunar Eclipse Posted by Hello

ஞாயிறு இரவில் தூர்தர்ஷன்

பாலாஜி

தூக்குத் தூக்கிப் படம் பார்த்திருக்கிறீர்களா?

1.கொண்டு வந்தால் தந்தை

2. கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்

3. கொலையும் செய்வாள் பத்தினி

4. உயிர்காப்பான் தோழன்

ஒரு சத்திரத்தில் இந்த விவாதம், நடக்கும் பொழுது, பொருள் தேடி நாலாபுறமும் அனுப்பப்பட இளவரசர்களில் ஒருவரான சிவாஜி, அதை ஒத்துக் கொள்ள மாட்டார். அதில் உண்மையில்லை என்று நிரூபவதாகக் கூறிச் சாவாலிட்டு, கிளம்புவதுதான் கதை. பத்மினி, ராகினி, பாலையா, என்று திறமையான நடிகர்களும், வித்தியாசமான கதையுடனும், அற்புதமான பாடல்களுடனும் வந்த படம். இதில் வரும் ‘ஆனந்தக் கோனாரே அறிவு கெட்டுத்தான் போனாரே’ என்று வரும் டப்பாங்குத்துப் பாடலைக் கேட்டுக் கோபமடைந்த கோனார்கள், நெல்லையில் ஒரு தியேட்டரின் திரைச் சீலையைக் கத்தியால் குத்திக் கிழித்து விட்டனர். பார்க்கவில்லையெனில் ஒரு முறை பாருங்கள். கொஞ்சம் பொறுமையும் வேண்டும்.

அன்புடன்

ச.திருமலை‘தூக்கு தூக்கி’ எனக்குப் பிடித்த படம். தூர்தர்ஷனில் ஞாயிற்றுக்கிழமை இரவில் சிவாஜி படம் என்றாலே, well left என்று காத தூரம் ஓடிக் கொண்டிருந்தேன். அம்மாவின் வற்புறுத்தலால் பார்க்க ஆரம்பித்த இந்தப் படத்தை, மிகவும் ரசித்தேன். திடீர் என்று, டிவியில் அன்று பார்த்த படங்களில் எவை பிடித்திருந்து, நினைவிலாடுகிறது என்று பட்டியல் போட்டு பார்த்தேன்.

  • பாலு மகேந்திராவே ரசிக்கும் ‘அந்த நாள்’

  • பாகப் பிரிவினை

  • பெரும்பாலான ம.கோ.ரா. படங்கள். சட்டென்று மனதில் தோன்றுவது: மலைக் கள்ளன்; அலிபாபாவும் நாற்பது திருடர்களும்.

  • ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிகாமணி

  • காதலிக்க நேரமில்லை

  • நூற்றுக்கு நூறு

  • ஔவையார்

  • திரும்பிப் பார், வாழ்க்கை, மணாளனே மங்கை பாக்கியம், பராசக்தி எல்லாம் நினைவுக்கு வந்தாலும், க்ளிசரினும் கம்பலையும் நினைவுக்கு வந்து veto செய்கிறது.


ஏறாத மலைதனிலே

ஜோரான கௌதாரி ரெண்டு

தாராளமாக இங்கே வந்து

ததிங்கிணத்தோம் தாளம் போடுதய்யா

கல்லான உங்கள் மனம்

கரைந்திட ஏங்கையிலே

கண்கணட காளியம்மா

கருணை செய்வது எக்காலம்

போடு

தாந்திமிமி தாந்திமிமி தந்தக்கோனாரே

தீந்திமிமி தீந்திமிமி திந்தக்கோனாரே

ஆனந்தக் கோனாரே

அறிவு கெட்டுத்தான் போனாரே

செக்கச்செவேலேன செம்மறியாடுகள்

சிங்காரமாக நடை நடந்து

வக்கணையாகவே பேசிக்கொண்டு

பலிவாங்கும் பூசாரியை நம்புதம்மா

போடு

தாந்திமிமி தாந்திமிமி தந்தக்கோனாரே

தீந்திமிமி தீந்திமிமி திந்தக்கோனாரே

ஆனந்தக் கோனாரே

அறிவு கெட்டுத்தான் போனாரே

சோலைவனங்கள் தழைச்சிருக்க

அதை சொந்தமாய் திங்கும் சுகமிருக்க

பாலைவனத்தையே நம்பிவந்து

பலிவாங்கும் பூசாரியை நம்புதடா

தூக்கு தூக்கி

குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்

கொம்பேறித் தாவும் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்

உருண்டையான உலகின் மீது

உயர்ந்தோர் சொன்ன உண்மை ஈது

உருவ அமைப்பைக் காணும் போது

ஓரறிவு ஈரறிவு உயிர் என மாறி மாறி வாலில்லாத குரங்கு

ஓரறிவு ஈரறிவு உயிர் என மாறி மாறி வாலில்லாத உர்ர்ர்ர்ர்ர்

பிடித்த பிடி விடாமலே சிலர் பேசும் பேச்சாலும்

தலையில் பேனும் ஈரும் தேடித் தேடிப் பிடிப்பதனாலும்

நடிப்பினாலும் நடத்தையாலும் நரர்களும் வானரமும் ஓரு குலம்

உடுக்கும் உடைகள் படிப்பினாலும்

உள்ளபடி பேதமுண்டு

உண்மையில் வித்தியாசமில்லை

குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்

மாமா குரங்கு

தாத்தா குரங்கு

பாப்பா குரங்கு

நீதான் குரங்கு

நீ குரங்கு

குரங்கு… குரங்கு…. குரங்கு…

குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்

கொம்பேறித் தாவும் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்

Dhool.com – thookku thookki

எவருக்குப் பொருத்தம்?

பின்வரும் பாடலை இன்றைய சுழலில் யார் பாடினால் பொருத்தமாக இருக்கும்?

1. அமெரிக்க ஜனாதிபதி புஷ்

2. ஜனாதிபதி வேட்பாளர் கெர்ரி

வேறு எவராவது உங்கள் மனதில் உதித்தாலும் ஒரு வார்த்தை சொல்லுங்க 🙂

அடாடா அகங்கார அரக்க கைகளில் உலகிங்கே

அழிக்கும் அதிகாரம் இவருக்கு தந்தவன் எவன் இங்கே

விடவா இவர் தம்மை வெந்து வேடிக்கை பார்த்திடவா

முடமாய் முடங்காது மூர்க்கர் இவர் தம்மை முடித்திடவா

மனிதகுலத்தின் துணையோடி

மனதை அறுக்கும் ரணமெல்லாம்

இனியும் வருத்த விட மாட்டேன்

தனியனாக அறுத்தெறிவேன்

தகனம் நடக்கும் இடத்தில் எனது

ஜனனம் என்று புரிந்து கொள் மனிதா

(அடாடா அகங்கார)

வறுமையும் துரத்த வாழ்க்கையும் துரத்திட

வறண்டு போன மனிதனும் துரத்துவதா

பரிவில்லாத பாவிகள் துரத்திட

பதுங்கிப் பதுங்கி பகைவரும் துரத்துவதோ

அந்தரி வாராகி சாம்பவி அமர சோதரி

அமல ஜெகஜ்ஜால சூலி சுந்தரி நிரந்தரி துரந்தரி

வனராஜ சுகுமாரி கௌமாரி

இரங்கும் நெஞ்சு இறுகுது இறுகுது

நெருப்பு கனலில் கீதையைக் காத்திடவே

தோள் இரண்டும் துடிக்குது துடிக்குது

துரோக கூட்டம் தொலைவதை பார்த்திடவே

வையமே வானமே வாழ்த்திடு

தீயவை யாவையும் மாய்த்திடு

நாளை உலகில் நல்ல மனிதன் தோன்றட்டுமே

(அடாடா அகங்கார)

காற்றை விரட்டும் சருகுகள் உண்டோ

கடலில் ஆடும் அலைகளை தடுப்பதுண்டோ

ஆற்றைத் திருப்ப செய்பவன் உண்டோ

நேற்றை நிறுத்தி பிடித்தவன் எவரும் உண்டோ

பொறியரவ முடித்தவனே

நெருப்பு விழி துடிப்பவனே

கரித்தோலை உடுப்பவனே

புலியாடை உடையவனே

சுடுகாடு திரிபவனே

திரிசூலம் தரிப்பவனே

ஏழு கடல்கள் நெஞ்சில் எழுந்தது

இடி முழக்கம் என்னுள் முழங்கிடுதே

பிடிபடாத பேயர்கள் எல்லாம்

பொடி பொடிக்க கரங்கள் துடிக்கிறதே

தடுப்பவன் எவனடா?

திறமுடன் தாண்டிவா

எல்லையை என்னைத் தொட

ஒருவன் இல்லை

இருவன் இல்லை

எவனும் இல்லையே

(அடாடா அகங்கார)

நன்றி: RAAGA – Pithamagan – Tamil Movie Songs

எப்படை வெல்லும்

நன்றி: Muddy River