Daily Archives: மே 25, 2004

மெடிமிக்ஸ் – தினகரன்: தமிழ் சினிமா விருதுகள்

விருது பெற்றவர் திரைப்படம் வழங்கியவர்கள்
சிறந்த நடிகர் விக்ரம் பிதாமகன் சரத்குமார்
சிறந்த நடிகை ஸ்னேஹா பார்த்திபன் கனவு ராதிகா & மெடிமிக்ஸ் நிர்வாகி
தலைமுறை சிறப்பு விருது – நடிகர் ஜெமினி கணேசன்   கே பாலச்சந்தர் & விஜயகுமார்
தலைமுறை சிறப்பு விருது – நடிகை சரோஜா தேவி   ஏவிஎம் சரவணன் & சிந்தாமணி முருகேசன்
சிறந்த இயக்குநர் பாலா பிதாமகன் மெடிமிக்ஸ் நிர்வாகி
சிறந்த அறிமுக இயக்குநர் செல்வராகவன் காதல் கொண்டேன் தனுஷ் & நதியா
சிறந்த அறிமுக நடிகர் ரவி ஜெயம்  
சிறந்த அறிமுக நடிகை சதா ஜெயம்  
சிறந்த குணச்சித்திர நடிகர் ரகுவரன் திருமலை ஸ்ரீகாந்த் & தேனப்பன்
சிறந்த குணச்சித்திர நடிகை சங்கீதா பிதாமகன் ஜி தியாகராஜன் & ஷ்யாம்
சிறந்த நகைச்சுவை நடிகர் கருணாஸ் திருடா திருடி குஷ்பூ
சிறந்த வில்லன் ஜீவன் காக்க காக்க நெப்போலியன் & சித்ரா லஷ்மணன்
சிறந்த ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் பிதாமகன் பிசி ஸ்ரீராம் & விந்தியா
சிறந்த இசை தினா திருடா திருடி ரீமா சென்
சிறந்த பாடகர் ஹரீஷ் ராகவேந்திரா ‘தேவதையைக் கண்டேன்’ சிபிராஜ் & அருண்குமார்
சிறந்த பாடகி மாலதி ‘மன்மத ராசா’ இப்ராஹிம் ராவுத்தர் & தாரிகா
சிறந்த பாடலாசிரியர் வைரமுத்து இயற்கை சேரன்
சிறந்த கலை கே பிரபாகரன் அன்பே சிவம் ஜெய் ஆகாஷ் & உமா
சிறந்த நடனம் சிவசங்கர் ‘மன்மத ராசா’ விக்னேஷ் & ஸ்ருதிகா
சிறந்த கதை பாக்யராஜ் சொக்கத்தங்கம்  
சிறந்த வசனம் ஹரி சாமி  
சிறந்த குழந்தை நட்சத்திரம் பேபி கல்யாணி ஜெயம்  
சிறந்த சண்டை ஸ்டன் சிவா பிதாமகன் ஸ்ரீமான் & கணிகா
விமர்சகரின் சிறந்த படம் அன்பே சிவம் லட்சுமி மூவி மேக்கர்ஸ் கஸ்தூரி ராஜா & ரமேஷ் கன்னா

 

ஆதாரம் + நன்றி:

1. Y! India Movies

2. தினகரன் தமிழ் சினிமா விருதுகள்

3. தினகரன் – 2004 (1)

4. தினகரன் – 2004 (2)

5. விருது பெற்றிருக்கவேண்டிய பாடல்??

Advertisements

விரல் நுனியில் குறள்

திருக்குறள்: என்னிடம் இருக்கும் பதிப்பு http://www.suvadi.com என்னும் முகவரியை சுட்டுகிறது. தற்போது அது இயக்கத்தில் இல்லை. ‘விரல் நுனியில் குறள்’ மிகவும் உபயோகமான நிரலி. தமிழில் திருக்குறள்; கூடவே சுருக்கமான அர்த்தம். ஆங்கிலம் வசதிப்படுமானால் ஆங்கிலம்; தமிழில் அர்த்தம் வேண்டுமானால் தமிழ். அதிகாரம் வாரியாக டக் டகென்று மேயும் வசதி.

Installation Instructions: Kural works under Windows 95, 98 and NT©. Unzip the kural.zip file and extract the Kural.exe file to any directory on your PC. That’s all. To uninstall, simple delete the Kural.exe file.

எழுதியவர்: இளங்கோ சம்பந்தம்

கிடைக்கும் சுட்டி: திருக்குறள்

வாதம் vs. விவாதம்

நான் பார்த்த இணையத்தில் இந்த நாள் மட்டும், எந்த ஒரு விவாதமும் முழுமையாக முடியவடியவில்லை. மணிக்கணக்காய் விவாதம் செய்தாலும் முடிவில் ‘என் கருத்து எனக்கு, உன் கருத்து உனக்கு’; உன் மூக்கு, என் மூக்கு என்று முடிந்து விடுகிறது. இந்த விவாதத்தில் நமக்கு மிஞ்சுவது சிறிது மன உளைச்சல்தான். இப்படி பைசா பிரயோஜனம் இல்லாத ஒரு விஷயத்துக்கே நம்மால் ஒத்து போக முடியவில்லையென்றால் எப்படி இதையே பிழைப்பாக நடத்தும் அரசியல்வாதிகளும், சினிமா நட்சத்திரங்களும் ஒத்துப் போவார்கள். ஆனால் நாம் விடாமல் பக்கம் பக்கமாக அரசியல்வாதிகள் முதல் அனைவரையும் இப்படி செய்ய வேண்டும், அவரோடு பேசி சமாதானம் ஆக வேண்டும் என்று எழுதுகிறோம். நாம் இப்படி செய்வது…

1. ஊருக்குதான் உபதேசம்.

2. நான் செய்வது சரி ஆனால் அவர்கள் அப்படி செய்யக்கூடாது (சமூகத்தின் பார்வைபடுவதால்).

3. அட போய்யா பெருசா வந்துட்டான்.

4. நான் செய்வது சும்மா பொழுது போகாமல்; ஆனால் அவர்களுக்கு இது பிழைப்பு, ஆகவே அவர்கள் ஒத்துப் போக வேண்டும்.Poll Results 1 

Poll Results 1 Posted by Hello

கவர்ந்த உபயோகங்கள்

 • பயிற்சிநிலை பொறுக்கி

 • பரிபூரண பொறுக்கி

 • மீனாட்சி என்றால் தாமிர தேகம்

 • கோவிலுக்கு சென்று நன்றி அறிவிப்பு கூட்டங்கள்

 • சாகசம் கலந்த வருமானம்

 • மானசீக குரு; மரியாதைக்குரிய நண்பன்

 • ஓயாத ஞாபக படையெடுப்புகள்

 • பிசாசெனக் கவிந்து நின்ற தனிமை

 • கலை நேர்த்தியுடன் செய்கிற அயோக்கிய கவிஞன்

 • முகத்தில் அறையும் விஷச் சொற்கள்

 • ஆத்மசுத்தியுடன் கெட்ட காரியங்கள்

 • பால்பாயிண்ட் பேனா சைஸில் எழுதப்பட்ட திருக்குறள்

தூணிலும் இருப்பான் – பா. ராகவன்

சபரி / ரு. 55