Monthly Archives: மார்ச் 2004

நெஞ்சில் நிற்கும் உணர்வை பாதிக்கும் வலைப்பதிவு தொடர்?

என்னுடைய அடுத்த கருத்துக் கணிப்பு, வலைப்பதிவில் தங்களின் சிந்தனையைத் தூண்டி உள்ளத்தை மகிழ்வித்தத் தொடர் எது என்பதை தெரிந்து கொள்ளச் செய்யும்.

கீழே சிலர் எழுதிய (என்னுடைய நினைவில் நிற்கும்) தொடர்களை குறிப்பிட்டுள்ளேன். ஒருவரிடமிருந்து ஒரு தொடர் மட்டுமே கணிப்பில் சேர்த்துக் கொள்ள ஆசை. தொடர் என்பதற்கு அடையாளமாக மூன்று பகுதிகள் அல்லது நாலு கிலோபைட்டாவது வந்திருத்தல் அவசியம்.

எனக்கு உதவியாக பின்னூட்டங்களின் மூலமோ bsubra at india . com என்னும் மின்னஞ்சல் மூலமாகவோ நான் தவறவிட்டவர்களையும், ஒன்றுக்கு மேல் சுவையான தொடரை எழுதியவர்களிடமிருந்து எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் சொன்னால் சௌகரியமாக இருக்கும். தங்களின் உதவிக்கு எனது நன்றிகள்.

(ஒன்றுக்கு மேல் வலைப்பதிந்தவர்களில், என்னுடைய தேர்ந்தெடுப்பு (**) என்பதன் மூலம் சுட்டப்பட்டுள்ளன.)

1. அருண்

– தராசு

– நச் பூமராங்

– நெத்தியடி (**)

– பாகிஸ்தானில் இந்தியா: ஒரு நாள் போட்டி பதிவுகள்

2. பத்ரி

– சட்டமன்ற உரிமை மீறல்

– ஜெயலலிதா வழக்குகள்

– கிரிக்கெட் லஞ்சம்

– தொலைதொடர்பு நிறுவனங்கள்

– ஸ்டார் நியூஸ்

– தமிழில் வலைப்பதிவு

– தமிழ் இணையம் 2003

– நீதித்துறையில் சீர்திருத்தங்கள்

– குருமூர்த்தியின் கட்டுரைகள் பற்றிய கருத்துகள் (**)

– ப. சிதம்பரம் தொடரின் விமர்சனங்கள்

– விளம்பரங்கள் பற்றிய பதிவுகள்

– சங்கம்: மாலன் சந்திப்புகள்

– தமிழ் இலக்கியம் 2004 மாநாடு

– பத்திரிகை சுதந்திரம்

– பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தரம்

– திசைகள் இயக்கம்: இலக்கியச் சந்திப்பு

– தமிழ்க் கல்வெட்டியலின் புதிர்கள்

– திறந்தநிரல் செயலிகளுக்குப் பிந்தைய உலகம்

– ழ கணினி அறிமுகம்

3. பாலாஜி – பாரி

– நம்மிடையே இருக்கும் நம்மவர்கள்

4. கண்ணன்

– வைகைக்கரை காற்றே!

5. காசி

– அமேரிக்க சாலைப் போக்குவரத்து அனுபவங்கள்

– வலைப்பதிவுகள் பற்றி ஒரு தொடர்

– என் பைக்கணினி அனுபவங்கள்

– சில விளக்குகள், சில வழிகாட்டிகள் (**)

– திருக்குறள் தரும் நிர்வாகக் கோட்பாடுகள்

– கம்பியில்லா வலைப்பின்னல் இணைப்பு

6. மதி

– வேம்படி மகளிர் கல்லூரி விடுதி (**)

– Inuit (இனுயிட்)

– நேரமோ நேரம்

7. மீனாக்ஸ்

– உனக்கு அல்வா; எனக்கு அவள்

8. முத்து

– தேடுங்கள் கிடைக்கும்.. கூகிள். …

9. பரி

– விளையாட்டாக ஒரு பாடம்

10. பவித்ரா

– அலைபாயுதே………..ஏஏஏஏஏஏ!

11. பா. ராகவன்

– திசைகள் இயக்கம்: இலக்கியச் சந்திப்பு

– பாகிஸ்தான்: முஷர·ப் (**)

– தமிழ் இலக்கியம் 2004 மாநாடு

– பாரதிய பாஷா பரிஷத்: பதிவுகள்

12. வே.சபாநாயகம்

– நினைவுத் தடங்கள்

13. செல்வராஜ்

– “இனிய தோழி சுனந்தாவிற்கு…!”

14. சுபா

– Recollecting my teaching experiences

– Penang

– Travelog – Seoul, S.Korea

– மலேசியா

– JK’s Letters to the Schools (**)

– ஜெர்மனி

15. சுந்தரவடிவேல்

– எங்கம்மாவின் பழமொழிகள்

16. தங்கமணி

– பொய்ச்சாத்திரப் பேய்கள்

17. வெங்கட்

– ஜப்பானிய பழக்கவழக்கங்கள்

– காமஞ் செப்பாது கண்டது மொழிமோ (**)

– மின்புத்தகங்கள்

– அறிவியலில் மொழியின் தேவை

– மைக்ரோஸாப்ட் பதிவுகள்

– மூன்றாவது வலை

– முழு நீலத் தமிழ்ப் படங்கள்

(என்னுடைய செவ்வாய் இரவு – இந்தப் புதிய கருத்துக் கணிப்பு வலையேறும். அதற்கு முன்

மறுமொழிகள் மூலம் விட்டுப்போனவர்களை சொல்பவர்களுக்கு என்னுடைய நன்றி 🙂

Advertisements

நட்சத்திர லைப்ரரி – பாலகுமாரன்

தொகுப்பு : சந்துரு

விஸ்வநாதனின் மனிதநேயம் என்ற கவிதைப்புத்தகத்தை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. புதுக்கவிதை என்று சொல்லப்பட்டாலும் மரபுக்கவிதை ஒட்டிய அவருடைய எழுத்தில் நல்ல சுவையிருக்கும்.

Baalakumaran‘‘ஏசு நாதரும் விஸ்வ நாதரும்

நேசம் வைத்த நம்

நெஞ்சின் உணர்வுதான்

கன்னி மேரியோ கன்யா

குமரியோ

தன்னை அறிந்தவர் கண் ணில் ஒன்றுதான்

பொய்யை மட்டுமே

போற்றும் வாழ்க்கையில்

தெய்வ உண்மைகள்

தெரிவதில்லைதான்

மண்டைக் காட்டிலே

மனித சக்திகள்

சண்டை போடவா சமயம்

வளர்ந்தது?

பெண்டு பிள்ளைகள் துண்டம்

துண்டமாய்க்

கொண்டு போகவா கோவில்

வைத்தது?

மத வளர்ச்சியா? மனித நேயமா?

எது உயர்ச்சியாய் இவர்க்குப் பட்டது!’

கவிஞர் விஸ்வநாதனுக்குத் தனியாக கடிதம் எழுத வேண்டும் என்று தோன்றியது. அதற்குப் பதில் இதோ, இங்கேயே அதைப் பற்றி எழுதி விட்டேன்.

‘சமரசம்’ என்று ஒரு இஸ்லாமிய மாத இதழ் எனக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். அதை நான் விடாது படிப்பது வழக்கம். சமீபத்திய சமரசத்தில், ‘ஹாஜிகளே என்ன கொண்டு வந்தீர்கள்?’ என்று பாகிஸ்தானிய சிந்தனையாளர் எழுதிய கட்டுரை ஒன்றை தமிழாக்கி வெளியிட்டிருக்கிறார்கள். எல்லா சமயத்திலும் இடித்துரைப்பு நிகழத்தான் வேண்டும் என்பதை எனக்கு அந்தக் கட்டுரை தெளிவாகச் சொல்லியது.

படிப்பது ஒரு பெரிய சுகம். அது நல்ல ஒரு காதற் பெண்ணோடு கைகோர்த்து சுற்றித் திரிவதுபோன்ற இதம்.

நன்றி: குமுதம்.காம்

வேலை கெட்ட வேலை :)

எனக்கு வேற வேலையே கிடையாது என்பது போல் தோன்றியதால், இன்னுமொரு சுய பரிசோதனைச் சாவடி பக்கம் நுழையச் சொன்னார். நிறைய கேள்வி, நடுநடுவே அதை இன்ஸ்டால், இதை நிறுவவா, என்ற சில தொல்லைகளுக்கு ‘NO’வும், மற்ற சுவாரசியமான சிந்திக்க வைத்த ரசனையான கேள்விகளுக்கு உண்மையான பதிலும் கொடுத்த பின்னர் வந்த முடிவுகள்:HELPER WHO FINDS MISSING CHILDREN OVER THE INTERNET(Submissive Introvert Concrete Feeler )

Like just 10% of the population you are a HELPER WHO FINDS MISSING CHILDREN OVER THE INTERNET (SICF). You are very tentative in the world and introverted with people–which means you are the shy and silent type. Hence the Internet. But behind your reserved exterior lies a dedicated person with a passion for the concrete truth who wants to, in his heart of hearts, help find missing children.

God bless you.

ஆய்த எழுத்து – யாக்கைத் திரி (ஃபனா)

ஏ.ஆர்.:ஃபனா?

ஆண்:யாக்கைத் திரி — காதல் சுடர்

ஏ.ஆர்.:அன்பே

ஆண்:ஜீவன் நதி — காதல் கடல்

ஏ.ஆர்.:நெஞ்சே

ஏ.ஆர்.:பிறவி பிழை — காதல் திருத்தம்

நெஞ்சே

இருதயம் கல் — காதல் சிற்பம்

அன்பே

ஆண்:யாக்கைத் திரி — காதல் சுடர்

ஏ.ஆர்.:ஃபனா?

குழு:தொடுவோம், தொடர்வோம், படர்வோம், மறவோம், துறவோம்

தொடுவோம், தொடர்வோம், படர்வோம், மறவோம், இறவோம்

பெண்:ஜென்மம் விதை — காதல் பழம்

லோகம் த்வைதம் — காதல் அத்வைதம்

சர்வம் சூன்யம் — காதல் பிண்டம்

மானுடம் மாயம் — காதல் அமரம்

உலகத்தின் காதல் எல்லாம் ஒன்றே அது

உள்ளங்கள் மாறி மாறிப் பயணம் போகும்

ஆண்:யாக்கைத் திரி — காதல் சுடர்

ஏ.ஆர்.:அன்பே

ஆண்:ஜீவன் நதி — காதல் கடல்

ஏ.ஆர்.:நெஞ்சே

ஏ.ஆர்.:பிறவி பிழை — காதல் திருத்தம்

நெஞ்சே

இருதயம் கல் — காதல் சிற்பம்

அன்பே

ஆண்:யாக்கைத் திரி — காதல் சுடர்

ஏ.ஆர்.:ஃபனா?

குழு:தொடுவோம், தொடர்வோம், படர்வோம், மறவோம், இறவோம் (முன்று முறை)

ஏ.ஆர்.:மப மப சரிகமபதநிச…. ஆ?

நன்றி: வாலி

ரசித்தவர்: உயிர் எழுத்து மடலாடற் குழு

குறள்வழி

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்

தகநக நட்பது நட்பு.

இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல; இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்.

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை

தான்சாம் துயரம் தரும்.

திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் ஏற்படுத்திக் கொள்கிற நட்பு, கடைசியாக ஒருவர் சாவுக்குக் காரணமாகிற அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும்.

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்

தீதுண்டோ மன்னு முயிர்க்கு.

பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும் நிம்மதியாக அமையும்.

நன்றி: :: திருக்குறள் – கலைஞர் உரை ::

நான் கற்றுக் கொண்ட பாடங்கள்

பாடங்கள்

1. எழுதுவதில் படு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நட்பு முறையில் கிண்டலடித்தால் கூட கேலியாகும் அபாயம் இருக்கிறது. குறை கூறும் விமர்சனத்தை வைத்தாலும், தனிமனிதத் தாக்குதலாக நினைக்க வாய்ப்புண்டு.

2. அக்கா அண்ணாக்களுடன் பிணக்குக் கொள்வது போல் அல்ல இணையச் சண்டைகள். வெட்டு, குத்து, ரத்தம் எல்லாமே virtual-ஆக வர வாய்ப்புண்டு.

3. எவருக்கும் அறிவுரை போல் தோற்றம் தரும் நினைவூட்டல் மடல்களோ, செல்ல ஐடியாக்கள் பட்டியலோ தேவையற்றது.

4. தனி மடலாக அனுப்பித்தாலும், வலைப்பதிவில் கிறுக்கினாலும், மைக்ரோசா·ப்ட்டின் அழிக்கப்பட்ட மடல்களைத் தோண்டியெடுத்தது போல் மீண்டும் கிளறப்பட்டு, உங்களுக்கு எதிராக வினையாகலாம்.

5. எவரையும் ‘நண்பர்தானே… தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்’, என்று நினைக்க வேண்டாம்.

6. சில சமயம் துணிச்சல் அதிகம் கொள்ளாமல் கோழையாகக் காட்சியளிப்பது நல்ல பெயரையும், வீரராகத் தோற்றம் காண்பிப்பது தியாகியாகவும் — பார்ப்பவருக்கு மயக்கத்தை உண்டு செய்யலாம்.

7. பெரியாரையும் பிரபாகரனையும் விமர்சிப்பதை விட்டுவிட்டு ஜெயலலிதாவையும் ஜார்ஜ் புஷ்ஷையும் விமர்சிப்பதே non-controversial and the secret to remain unbranded. அப்படி விமர்சிக்கத்தான் வேண்டுமென்றால் முகமூடி அவசியம் போட்டுக் கொள்ள வேண்டும்.

8. கருப்பு-வெள்ளையாக எந்த விஷயத்தையும் அணுக கிடையாது. எல்லாமே shades of grey.

9. விருந்தினர்களின் வீட்டில் அவர்களுக்காக பாத்திரம் கழுவும் வரை நம்ம வீடு. நமக்காகவும் உழைக்க ஆரம்பித்தால் அவர்களின் சொந்த வீடாகி நாம் அன்னியனாகப் போய்விடுவோம்.

10. இந்த மாதிரி பாடங்களை வெளியில் சொல்லாமல், உங்கள் நோட்பேடில் எழுதிக் கிழித்து விடல் அல்லது கடாசிவிட்டு ‘குப்பைத் தொட்டி’யையும் காலியாக்கி (சந்தேகமாக இருந்தால்) கடின இயக்கியை (hard-drive) format-உம் செய்துவிடல் நலம்.

செய்தித்தாள் வடிவில் தினமணிதினமணியை அச்சு வடிவில் படிக்கலாம்:தமிழகம் இருள்கிறது; அது நாடு முழுவதுவும் பரவுகிறது: கருணாநிதி

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.4 சதம் உயர்ந்துள்ளதாக மத்திய அரசு கூறிவருகிறது. ஐநா. வளர்ச்சிப் பிரிவு, ஆசிய வளர்ச்சி வங்கி போன்றவை 6 சதம் உயர்ந்துள்ளது எனக் கூறியுள்ளது. இந்தியா ஒளிரவில்லை; புளுகுகிறது. 100 கோடி மக்களில் 40 சதம் பேருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. 100 கோடியில் 33 கோடி மக்களுக்கு ஊட்டச்சத்து குறைவு, 14 கோடி மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதி இல்லை. 23 கோடி பேருக்கு பாதுகாக்கபபட்ட குடிநீர் இல்லை. 42 கோடி பேருக்கு ஒரு நாள் வருவாய் ரூ.45-க்கும் குறைவு. இந்தியரில் 29 கோடி பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளனர்.

மேலும் ஆண்டுக்கு மலேரியா, காசநோயால் 4 லட்சம் பேர் மரணமடைகின்றனர். 5 வயதுக்கு உட்பட்ட 20 லட்சம் குழந்தைகள் சத்து குறைபாட்டால் உயிரிழக்கின்றன. 40 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 99-2000 ஆண்டுகளில் நாட்டின் உணவு உற்பத்தி 21 கோடி டன். ஆனால் 2002-03ம் ஆண்டில் அது 18 கோடி டன்னாகக் குறைந்தது.

மேலும் மகளிருக்கு நேரும் அவலங்கள் ஏராளம். 30 4நிமிடத்துக்கு ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறார். 42 நிமிடத்துக்கு ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார். 49 நிமிடத்துக்கு ஒரு பெண் கடத்தப்படுகிறார். 93 நிமிடத்துக்கு ஒரு பெண் படுகொலை செய்யப்படுகிறார்.Pazhani Tramsபழனி மலையில் பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்படும் “ரோப்கார்’ திட்டத்தின் நிறைவுக் கட்டப் பணி முழுவீச்சில்

நடைபெற்று வருகின்றது. பக்தர்கள் அமர்ந்து செல்லும் பெட்டிகளை இணைக்கும் பணியில் ஊழியர்கள்.திருக்குறள்: (எண் – 541)

அதிகாரம்: செங்கோன்மை.ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்

தேர்ந்துசெய் வஃதே முறை.யாரிடத்திலும்(குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல், நடுவுநிலைமை பொருந்தி, (செய்யத் தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்.நிரந்தர நிம்மதி – என்.எஸ்.எம். ஷாகுல் ஹமீது:

“எல்லாம் விதியின் செயல் என்பது அறியாமையின் வெளிப்பாடு’, “விதியை மதியால் வெல்வோம்’ என்பது அறிவின் செயல்பாடு’ என்று கோடிட்டுக் காட்டியிருப்பது, சோர்ந்து போயிருப்பவனை தூக்கி நிறுத்த உதவும் உத்வேக வரிகள் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் உண்மை விளக்கம் அப்படி இருக்க முடியாது. பழியை எதன் மீதாவது போட்டு நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள ஆர்வம் இருந்தால் மட்டுமே, விதியைப் பழித்து மதியால் வென்றதாகப் பூரித்துக் கொள்ளலாம். ஆயினும் பாவம் ஓரிடம் பழி ஓரிடம் என்பதுபோல, எல்லாவற்றுக்கும் விதியைக் காரணம் காட்டுவதும், விதியை மதியால் வெல்லலாம் என்பதும் உண்மை நியதிக்குப் புறம்பானது.

“விதி’ என்பது, என்றோ எழுதி வைக்கப்பட்ட ஓர் அழுக்கடைந்த புத்தகம் என்று நாம் நினைத்தால், “மதி’ என்பது “விதி’யை வெல்லத்தக்கது என்பது சரியாகும். ஆனால், “எழுதிச் செல்லும் விதியின் கைகள், எழுதி எழுதி மேற்செல்லும்..’ என்பதுதான் வரலாறு காட்டும் உண்மை.தென்சென்னையின் பிரச்சினைகள்: போக்குவரத்து நெரிசல்; குடிநீர்ப் பஞ்சம்

TR Baalu & Baadar Sayeedhதிருவல்லிக்கேணி, தி.நகர், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, ஆலந்தூர், தாம்பரம் ஆகிய 6 தொகுதிகளை உள்ளடக்கிய தென் சென்னை மக்களவைத் தொகுதியில் தேசியப் பிரச்சினைகளை விட, உள்ளூர்ப் பிரச்சினைகளே தொகுதி மக்களின் கவனத்தை ஆக்கிரமித்துள்ளன.

பொதுவாக ஜாதி ரீதியாக வாக்குகள் பிரியாத, “காஸ்மாபாலிடன்’ தொகுதி. மயிலாப்பூர், மாம்பலம், நங்கநல்லூர், தாம்பரம் என பரவலாக வசிக்கும் பிராமணர்கள், அடுத்த நிலையில் தலித், வன்னியர், நாடார், முதலியார், மீனவர் சமூகத்தவரும் கணிசமாக வசிக்கின்றனர். பாஜகவோ, காங்கிரஸோ இங்கு மோதிக் கொள்ளாததால் வல்லரசாக்கும் வாஜ்பாயா? அயல்நாட்டு சோனியாவா? என்று முன்னிறுத்தப்படும் வாதம் இங்கு முக்கியத்துவம் பெறவில்லை.Glance @ Entertainment from TN