Daily Archives: மார்ச் 9, 2004

பெண் வெளிப்பாடுகள் – யாழினியன்

ஆறாம்திணை:

‘பெண் வெளிப்பாடுகள் 2001’ எனும் தலைப்பில் முழுநாள் கருத்தரங்கொன்றை 14.04.02 இல் ‘கங்கு’ அமைப்பினர் சென்னை சோழமண்டல ஓவியர் கிராமத்தில் நடத்தினர். இன்று பெண்ணியம் சமூக வெளிசார்ந்த கருத்தாக்கமாக, செயல்பாடு மற்றும் சிந்தனை மட்டங்களில் தொழிற்படுவது அங்கீகரிக்கப்பட்ட நிகழ்வாகிவிட்டது. ஆனால் படைப்புத் தளங்களில் பெண் வெளிப்பாடுகள் அமையப் பெற்றிருப்பினும் அவை குறித்து பாராமுகம் காட்டும் போக்கை சுட்டிக்காட்டினார், அ. மங்கை.

ராஜம் கிருஷ்ணன் எழுதிய ‘வனதேவியன் மைந்தர்கள்’, பா. விசாலத்தின் ‘உணர்வும் ஒளிர்கவென்று’ என்று இரு நாவல்களை ஒருங்கே ஓர் கட்டுரையாக இரா. தமிழரசி படித்தார். இரு நூல்களை அறிமுகம் செய்யும் நோக்கு மையப்பட்டிருந்தது.

கிருஷாங்கினி தொகுத்த ‘பறந்தல் அதன் சுதந்திரம்’ எனும் பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பை மதுசூதனன் விமரிசனம் செய்தார். இத்தொகுப்பில் உள்ள கவிதையாக்க முறைமை பற்றிய சிரத்தைக்கு போவதற்கு தடையாக தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகளில் உள்ள தவறுகளை விரிவாக சுட்டிக்காட்டினார். குறிப்பாக ஈழத்துப் பெண்களின் கவிதைகளை மூலப் பனுவலுடன் ஒப்பிட்டு தொகுப்பில் உள்ள தவறுகளை அம்பலப்படுத்தினார். எழுத்துப்பிழை, வரிகள் பல இல்லாமை, கவிதையின் அரைவாசி இல்லாமை, கவிஞர்களின் ஆள்மாறாட்டம் என பல தவறுகளை சுட்டிக்காட்னார். ஓர் தொகுப்பாக இதனைப் பார்ப்பதில் உள்ள சிக்கல்களையும் தெளிவு படுத்தினார்.

வீ. அரசுவை தொகுப்பாசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘பெண்ணியமும் பாரதியும்’ எனும் கட்டுரைத் தொகுப்பு நூலை அரங்க மல்லிகா விமரிசனம் செய்தார். தொகுப்பில் புதிதாக ஏதும் சிந்தனை வெளிப்படவில்லை. பலமுறை முன்பு கூறிய கருத்துக்கள் தான் கட்டுரைகளில் உள்ளன என்றார்.

அடுத்து அ. மங்கை எழுதிய ‘பெண் – அரங்கம் – தமிழ்ச்சூழல்’ எனும் நூலை அருணன் விமரிசனம் செய்தார். சில கட்டுரைகளில் கேள்விகளாக மட்டும் விரிந்து செல்லும் தன்மையை சுட்டி காட்டினார்.

நன்றி: சென்ற வார சென்னை (இப்பொழுது… போன வருட சென்னை?)

Advertisements

என்னைக் காணவில்லையே…கடவுச் சொல் தொகுப்பான், குக்கீ, என்று பல வகையில் பல இடங்களில் உள்நுழையும் பயனர் சொல்களையும், பதிவர் பெயர்களையும், அவற்றின் கடவு வார்த்தைகளையும், கடவுச்சொல் மறந்து போனால் ‘ரகசியக் கேள்வி’யையும் கேள்விக்கான சங்கேத பதிலையும் நினைவில் நிறுத்திக் கொள்வதற்குள் தாவு தீர்ந்து போகும் என்னைப் போன்றஅனைவருக்கும் அர்ப்பணம். நன்றி: பிக்கிள்ஸ்

பொன்மொழிகள் – போடுங்கம்மா ஓட்டு

TheStar.com: ஹமீத் கர்சாய் பெரிய மனதாக ஒரு அறிக்கை விட்டுள்ளார். மகளிர் தினத்தை இவ்வளவு சிறப்பாக நையாண்டி செய்ய முடியாது. “அன்பு சகோதரர்களே! உங்கள் மனைவியையும் (அல்லது மனைவிகளையும்) சகோதரிகளையும் ஓட்டளிக்கப் பதிவு செய்யுங்கள். அவள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நீங்களே சொல்லிவிடுங்கள்; ஆனால், ஓட்டளிக்க அனுமதியளிப்பது முக்கியம்”.

ஆஃப்கானிஸ்தாலுள்ள நூறு லட்சம் வாக்காளர்களில், இதுவரை பதின்மூன்று லட்சம் மட்டுமே வாக்காளர் அட்டை பெற்றிருக்கிறார்கள். இதில் கால் பங்கு மட்டுமே பெண்மணிகள்.

Madras Talkies presents ... A Mani Ratnam Film ... Aaiytha Ezhuthu ... Official Website... coming soon..


சிஎன்என்: ஹஃப் – 6 எனப்படும் ஷாஹீன் – 2 ஏவுகணையை பாகிஸ்தான் பரிசோதித்திருக்கிறது. முன்பு புது டில்லி அல்லது பம்பாய் வரையிலுமே தாக்கும் திறன் கொண்ட (435 மைல்) ஹஃப் – 4-ஐ விட, சென்னை/கொல்கதா வரை (1250 மைல்) சென்று அணுகுண்டை விட்டுவிடும் திறன் கொண்டவை.ஸ்டேட்ஸ்மேன் – மன்னிப்போம்… மறப்போம்: காங்கிரஸை விட பிஜேபி அரசு முஸ்லீம்களுக்கு சாதகமாக இருந்ததாக மத்திய அமைச்சர் ஷாநவாஸ் ஹூசேன் “நாங்கள் கூட செல்பேசி வைத்துக் கொள்கிறோம்” என்கிறார். பிஜேபி அடுக்கும் சாதனை பட்டியல்.

* ஹஜ் உதவித்தொகை

* முஸ்லீம் ராஷ்டிரபதி

* இந்தியா பாகிஸ்தானிடையே மேம்பட்ட உறவு

மக்கள் மறக்கவேண்டியதை ஸ்டேட்ஸ்மான் பட்டியலிடுகிறது:

* குஜராத் நிணைவுகள்

* உணர்ச்சிகளைத் தூண்டும் நரேந்திர மோடியின் சொற்பொழிவுகள்

மகளிர் – கலை… விளையாட்டு… சமூகம்

கல்கி – 01.02.2004

‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்தின் நாயகி அபர்ணா, அமெரிக்க அழகிப் போட்டியில் ‘மிஸ் ஃபோட்டோ ஜெனிக்’ ஆகத் தேர்வு பெற்றவர். அம்மா, அப்பா, அக்கா, அண்ணன், அண்ணி என இவரது குடும்பமே கல்விப் பணியில் இருக்கிறது. “சென்னை, திருச்சி, துபாய் ஆகிய பகுதிகள்ல மொத்தம் பதினான்கு ஸ்கூல் நடத்தறோம். நானும் அந்தத் துறைக்கு வரணும்னுதான் வீட்ல எல்லோருக்கும் ஆசை. லயோலாவில் விஷுவல் கம்யூனிகேஷன் படிச்சிட்டிருந்தேன். கேமராவுக்குப் பின்னால் நிற்கிற படைப்பாளிக்கான படிப்பு”– அப்பு (அபர்ணாவை விரட்டிய பேய்!)
அபர்ணாவின் முழு பேட்டியையும் துரத்திய பேயையும் அறிய கல்கி – 01.02.2004 பார்க்கலாம்.


டென்னிஸ் உலகின் மகளிருக்கான பிரிவில், உலக அளவில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த கிம் கிளிஸ்டெர்ஸ். சென்ற ஆண்டு பிரெஞ்ச் ஓபன் மற்றும் அமெரிக்க ஓப்பனின் இறுதி சுற்றையும், ஆஸி. ஓப்பன் மற்றும் விம்பிள்டனின் அரையிறுதிச் சுற்றையும் அடைந்தவர் (ஏனுங்க அம்மணீ… ஒண்ணுத்திலும் கோப்பையை தூக்க மாட்டேன்றீங்க?!)

வரும் ஒலிம்பிக் பந்தயத்தில் இவர் கலந்து கொள்ளப் போவதில்லையென்று அடம் பிடிக்கிறார். காரணம் பதக்கம் அவர்கள் நாட்டுக்குத்தான் (என்பதாக இருக்கலாம்). பெரும் தொகையும் கிடைப்பதில்லை. இவர் மணக்கவிருக்கும்

ஆஸ்திரேலிய டென்னிஸ் சாம்பியனான லேட்டன் ஹெவிட்டும், ஏதென்ஸில் கலந்து கொள்ளப் போவதில்லையாம்.– குல்லூ (அடம் பிடிக்கிறார் க்ளிஸ்டெர்ஸ்)


“உலகத்திற்கு சேவை செய்யவும், ஆன்மிக ஞானத்தைப் பரப்புவதற்கும், ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் குறைந்தது இரண்டு இளம் வயதினராவது முன் வந்தால், சமாதானமும் அன்பும் அனைவரும் ஒரே குடும்பம் என்னும் உணர்வும் நிறைந்த புதிய உலகை நாம் உருவாக்கிவிடலாம்” என்று அருளுரைக்கிறார் அம்ருதானந்தமயி. அப்படியொரு பக்குவம், ஆன்மிக நாட்டம், தன்னலம் நினையாத பெருமனம் எல்லோருக்கும் வாய்க்க இறைவன்தான் வழிகாட்ட வேண்டும்.

சின்ன வயதிலேயே வீட்டில் ‘அம்மா’ காசு திருடியதுண்டு. எந்த வீட்டிலாவது யாராவது பசித்திருந்தால் கதாமணிக்குப் பொறுக்காது. தாயாரின் உண்டியல் பணம் அங்கு இடம் மாறிப் பசி தீர்க்கும்.

ஏழைகளுக்கு இலவச வீடுகள் வழங்கும் ‘அமிர்தகுடீரம்’ முக்கியமானது. வரும் பத்தாண்டுகளில் நாடெங்கிலும் ஒரு லட்சம் வீடுகள் கட்டுகிற குறியீடு. இதுவரை உருவாகியிருப்பதில் புனேயில் உள்ள அமிர்தகுடீரம்தான் பெரியது; 1750 வீடுகள் கொண்ட குடியிருப்பு அது.

இன்னும் ஆதரவற்ற பெண்களுக்காக உதவும் மாதாந்திர உதவித் திட்டம் ‘அமிர்த நிதி, ஆதரவற்ற குழந்தைகளின் நலனுக்கான ‘அமிர்த நிகேதன்’, அன்பு இல்லம் என்கிற பெயரில் ‘முதியோர் இல்லம்’ என்று சிறு சிறு திட்டங்கள் ஒரு புறம்.

“இந்த உலகமே உங்களுடைய குடும்பம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களை அறியாமல், நீங்கள் உங்களது இடது கையைக் காயப்படுத்தி விட்டால், உடனே உங்களது வலதுகை, இடதுகைக்கு உதவ முன் வருகிறது. ஏனெனில்,

அந்தக் கையும் உங்களது உடலின் அங்கமே என்னும் உணர்வு உங்களுக்கு உள்ளது. இதே போன்ற ஐக்கிய உணர்வோடு, உலகத்தில் உள்ள நமது சகோதர சகோதரிகளுக்கு நாம் உதவ வேண்டும்” என்கிறார் அம்மா.– பாலன் (வேறென்ன வேண்டும்?)
அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்… 🙂