Monthly Archives: திசெம்பர் 2003

கிண்டல் அல்ல! நிஜம் – திரு. எல்லே சுவாமிநாதன்

Yahoo! Groups : tamil-ulagam Messages : Message 26699 வேலைக்கான நேர்முகத் தேர்வில் அவ்ர்களிடம் ” கீ போர்டுல டாட்டா என்ட்ரி தெரியுமா? பைல் ஸேவ் பண்ணத்தெரியுமா? மெர்ஜிங் தெரியுமா? ரிப்போர்ட் பிராப்பரா பிரின்ட் போட தெரியுமா?” என்பார்கள்.

[ நீவிர் செய்திகளை உள்ளிட விசைப்பலகையில் தட்டச்சிட அறிவீரோ? கோப்பில் காப்பதெவ்வாறென்று அறிவீரா? கோப்பிணைப்பறிவீரோ? தேவையான அறிக்கைகளை அச்சுப் பொறியில் நச்சென அச்சிடும் திறன் உண்டோ உம்மிடம்? அங்ஙனமாயின் இவ்விடத்து உமக்கு பணி தருவோம்” என்று பேசுவதில்லை].

“கீ போர்டு,மெளசு, எப்படிப் போட்டாலும் டயலாக் பாக்ஸ் வேலை செய்யலே”னு சொல்றது எப்படி, “விசைப்பலகையோ எலியோயறியேன் இசையாமல்போனதெதுவென அசையாதே உள்ளிடும்பெட்டின்னு சொன்னா “நீ வேலை செஞ்சது போறும்”ன்னுடுவான்.

Advertisements

வலைப்பதியா விட்டால் சோம்பேறி அல்ல

கிப்பன் (Gibbon) தன்னுடைய “ரோமாபுரி சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி” என்கிற நூலை எழுத 20 ஆண்டுகள் எடுத்தக்கொண்டாராம்.

பிளாட்டோ தன்னுடைய ‘குடியரசு’ (Republic) நூலின் முதல் வரியை ஒன்பது விதமாக எழுதி மனநிறைவு அடைந்த பிறகே வடிவமைத்தாராம்.

எட்மன்ட் பர்க் (Edmund Burke) நாடாளுமன்றத்தில் வாரன் ஹேஸ்டிங்ஸ் (Warren hastings) குறித்த தீர்மானத்தில் பேச எழுதிய முடிவுரையை 16 முறை எழுதி எழுதி செம்மைப் படுத்தினாராம்.

பட்லர் (Butler) தன்னுடைய பகுத்தாய்வை (Analogy) 20 தடவைகள் எழுதி

னாராம்.

விர்ஜில் தன்னுடைய ‘எனீட்’ (Aeneid) நூலை எழுத 12 ஆண்டுகள் செலவழி

த்தாராம். இருந்தாலும் அதில் அவருக்கு மனநிறைவு ஏற்படவில்லை. ஆகவே மரணப் படுக்கையிலிருக்கும்போது அதைக் கொளுத்த முயற்சித்தாராம்.

எர்னஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway) தன்னுடைய ‘வயோதிகனும் கடலும்’ (old man and the sea) நூலை 202 தடவை திரும்பத் திரும்ப எழுதினாராம்.

விட்மன் (Whitman) தன்னுடைய ‘புல்லின் இதழ்களை’ திரும்பத் திரும்ப செம்மைப் படுத்தி இறுதியாக இதுவே முடிவான வடிவம் என்று பிரகடனப்படுத்தினாராம்.

டால்ஸ்டாய் தன்னுடைய ‘போரும் சமாதானமும்’ (War & Peace) நூலை திரும்பத் திரும்ப எழுதினாராம்.

காப்கா தன்னுடைய ‘விசாரணை’ உட்பட பல நூல்களை பதிப்பிக்க வேண்டாம் என்று எழுதிவிட்டுத்தான் இறந்து போனாராம்.

-பழனி

சிங்கை

தமிழ்-உலகம் மின்குழுமம்

From: http://groups.yahoo.com/group/tamil-ulagam/message/20512

எப்பொழுதோ படித்தாலும் இன்றும் பிடிப்பது

‘அதுக்கப்புறம் நல்ல வேலை, ஜாஸ்தி சம்பளம் தராங்க-ன்னு சொல்லி இங்க வந்தாச்சு. நல்ல ஊருதான், ஆனா என்னவோ எனக்குப் பிடிக்கலை. காசுக்காக சொந்தஊரை விட்டுட்டு வந்துட்டோமேன்னு எனக்கு ஒரு தவிப்பு’,

ரெண்டாவது மொழியாவாவது தமிழைக் கத்துக்கட்டுமே-ன்னேன், அதுக்கும் ஒத்துக்கலை, அதைவெச்சு இவங்க தமிழங்க-ன்னு கண்டுபிடிச்சுடுவாங்களாம், என்ன முட்டாள்தனம்சார் இது?

நாம யாருங்கறதை மறைச்சு வாழறது ஒரு வாழ்க்கையா? சாகறவரைக்கும் அஞ்ஞாதவாசமா?’, உணர்ச்சிபொங்கப் பேசினார்.

ஆனா பெண்டாட்டி, பிள்ளையோட பேசாம தாய்பாஷையை வேற யார்கிட்ட பேசிக்கேட்கமுடியும் சொல்லுங்க? முன்னெல்லாம் ஒவ்வொரு புத்தகத்தை வாங்கிச் சேர்க்கும்போதும் எனக்கப்புறம் என் பிள்ளைங்க இதைப் படிக்கும், நான் சிரமப்பட்டமாதிரி ஞானத்தைத் தேடி அதுங்க அலைய

வேண்டியதில்லை-ன்னு தோணும். அந்த நினைப்புக்கெல்லாம் இப்போ அர்த்தமே இல்லாம போச்சு.’

– லாவண்யா

27 11 2001

(கொடை சிறுகதை)

எங்கள் bachelor வீட்டு சமையலறையும் என் காதலியும் – மீனாக்ஸ்

Yahoo! Groups : uyirezuththu Messages : Message 3862:

எங்கள் bachelor வீட்டு சமையலறையும் என் காதலியும்

============================================எங்கள் bachelor வீட்டு சமையலறை

ஒரு ஆண்கள் ரா?¡ங்கம்..

எப்போதும் புயல் புகுந்து புறப்பட்டது போல்

அங்கங்கே சிந்திய சர்க்கரையும்

உலர்ந்த காய்கறிகளுமாய்

அலங்கோலமே அதன் அலங்காரம்..

ஒரு சில நாட்களைத் தவிர..!!

அந்த நாட்களிலெல்லாம்

என்னைக் காதலிக்கும் தேவதை

அங்கு பிரசன்னமாகியிருப்பாள்..

“மதிய உணவு சமைத்துத் தருகிறேன்”

என்று சொல்லி எங்கள் ரா?¡ங்கத்தில்

அல்லி ரா?யம் நடத்த வருவாள்..

அவள் சமைக்கையில் (அவள்) அழகை ரசிக்க நானும்

அவள் சமைக்கும் அழகை ரசிக்க என் அறைத்துணைவர்களும்

அங்கு கூடுவோம்..

“இவனையெல்லாம்

எப்படிக் காதலிச்சீங்க சி?டர்?” என்பதாக

அவர்களின் குறுக்கு விசாரணை ஆரம்பிக்கும்..

புன்னகையை பதிலாக்கி

என்னைக் கண்களால் கேலி செய்வாள்..

“சும்மா இருங்கடா..” என்ற என் சிணுங்கலைப்

பொருட்படுத்தாமல்

“இவனைப் பத்தி முழுசாத் தெரிஞ்சுக்காம

ஏமாந்துட்டீங்க சி?டர்..” என்பார்கள் என் எதிரிகள்..

அதற்கும் சிரித்து விட்டு,

என் தவிப்பைப் பார்த்துப் பரிதாபப்பட்டு,

“பரவாயில்லை..

மனசுக்குப் பிடிச்சுத் தான் ஏமாந்தேன்..” என்பாள்..

மறைக்க முயன்று தோற்று,

லேசாய் வெட்கப்படுவாள்..

போகிற போக்கில்

கரண்டியால் என் தலையில்

செல்லமாய் ஒரு தட்டு..

“சி?டர்.. நீங்க வெங்காயமெல்லாம்

நறுக்க வேண்டாம்..” என்பான் ஒரு நண்பன்..

“ஏன்??”

“நாங்க இருக்கும் போது

உங்க கண்ணில இருந்து

ஆனந்தக் கண்ணீர்ங்கிற பேரில கூட

கண்ணீர் எதுவும் வரக் கூடாது..!!”

என்று சொல்லி செண்ட்டியால் அடிப்பான்..

கேட்டதும் அவள் கண்களில்

ஆனந்தக் கண்ணீர் வரும்..!!

துடைத்தால் தெரிந்து போகுமென

சிரித்து முகம் திருப்பிக் கொள்வாள்..

“டேய்.. சும்மா நிற்காதே..

சி?டருக்கு ஏதாவது உதவி பண்ணு..”

என்று என் நண்பர்கள் வம்புக்கிழுப்பார்கள்..

அவள் மறுத்து,

“கல்யாணத்துக்கு அப்புறம்

அவர் தானே தினமும் சமைக்கப் போறார்..

இப்பவாவது சும்மா இருக்கட்டும்..”

என்று சொல்லி

பொய்க்கோபத்துடன் முறைக்கும் என்னை

ரசித்துச் சிரிப்பாள்..

சமையல் முடிந்ததும்

பரபரப்புடன் பரிமாறி

எங்கள் முகம் பார்த்து நிற்பாள்..

“சி?டர்..!! ரொம்ப நல்ல இருக்கு..

இவன் ரொம்ப கொடுத்து வச்சவன்..”

என்று சொல்வதைக் கேட்டு,

“ஏன்? என் அண்ணன்மார்

நீங்களெல்லாம் வந்து கேட்டா

நான் சமைச்சுப் போட மாட்டேனா என்ன.??

நீங்களும் கொடுத்து வச்சவங்க தான்..”

என்று பூரிப்புடன் சொல்வாள்..

எங்களைத் தனிமையில் விட்டு

நண்பர்களெல்லாம் மாடிக்குச் சென்றதும்

நான் பரிமாற அவள் சாப்பிடுவாள்..

கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு

கடிகாரம் பார்த்து அலறி,

“நான் கிளம்பணும்.. நாளைக்கு பார்க்கலாம்..

நேரமாச்சு..” என்று பதறி

அண்ணன்மார்களிடமும் சொல்லிக் கொண்டு

கிளம்பிப் போவாள்..

அவள் வந்து போன பிறகு

தென்றல் நுழைந்து புறப்பட்டது போல்

அழகும் ஒழுங்கும் குடியேறும்..

எங்கள் வீட்டு சமையலறையில் மட்டுமல்ல,

எங்கள் உள்ளங்களிலும்..!!

— Meenaks

பெண்களின் திரை சித்தரிப்பு முன்னேறியிருக்கிறதா?

rediff.com: The Year That Was — A slide show:

Bollywood Year in Review

மாறவில்லை என்றே தோன்றுகிறது. ‘சல்தே… சல்தே’ போன்ற அச்சு வார்ப்பு, சாக்லேட் ப்ரீதியின் இளம்பெண் நடிப்பு, பண மிதப்பில் தேவதாஸ் என்று நான் பார்த்த பல படங்களில் ஸ்டீரியோடைப்களே கிடைத்தது.

வேலைகளே வெளியேறு

New Economy: Offshore Jobs in Technology: Opportunity or a Threat?: இந்திய நண்பர் ஒருவரின் கூற்றுப்படி, தொலைபேசியில் வழங்கும் தொழிற்நுட்ப சேவைக்கு ஒரு நிமிடத்துக்கு ஆறு டாலர் வசூலிக்கிறார்கள். அநியாயமாகப் பட்டது! சேவையழைப்பு (call-center?) ஒரு மணி நேரத்தில் 360 டாலர் சம்பாதிக்கிறார்கள். அமெரிக்காவிலேயே சல்லிசாக மாட்டும் என்று தோன்றியது. அதனால்தான் லேஹ்மான், டெல் ஒப்பந்தங்களை ரத்து செய்து விட்டன போலும்.

கட்டுரையில் இருந்து:

–> இந்தியாவிற்கு செல்வதனால் 20 முதல் 40 சதவிகிதம் வரை மிச்சம் பிடிக்க முடியும்.

–> அமெரிக்காவில் 80,000 டாலர்களுக்கு வேலைக்கு அமர்த்துபவரை, இந்தியாவில் 20,000த்துக்கே வைத்துக் கொள்ளலாம். (ஒரு மாதத்துக்கு 75,000 ரூபாய் 🙂

–> 2015-க்குள் 3.3 மில்லியன் வேலைகள் வளரும் நாடுகளுக்கு சென்று விடுகிறது.

–> இதில் 462,000 கணினி வல்லுநர் வேலையும் அடக்கம்.

–> அமெரிக்காவில் தற்போது 130 மில்லியன் மக்கள் வேலையில் உள்ளார்கள். ஒரு வருடத்துக்கு கிட்டதட்ட 3.5 மில்லியன் வேலைகளை புதிதாக அமெரிக்கா உருவாக்குகிறது. எனவே, பத்து வருடங்களில் 35 மில்லியன் புதிய வாய்ப்புகள் வரும்போது, 3.3 மில்லியன் வெளியேறுவது எல்லாம், கடல் நீரில் சிறு துளியே.

–> ஒரு டாலருக்கான வேலை வெளியூருக்கு சென்றால், அமெரிக்காவுக்கு 12 முதல் 14 விழுக்காடு அதிக லாபம் ஈட்டித் தருகிறது.

–> இருபதாம் நூற்றாண்டின் இறுதிகளில் உற்பத்தித் துறையில் வேலை இழந்தவர்கள் 25 சதவிகித குறைந்த சம்பளத்துக்கு புதிய உத்யோகம் கிடைத்தது.

–> சொன்னதை செய்பவரின் வேலை பறி போய் விடும். கணினி அறிவுடன் கூட வங்கி, தொழில் துறையின் நுணுக்கங்களும் அறிந்து பிரசினைகளைத் தீர்த்து புதிய கோணங்களில் ஆராய்பவர் மட்டுமே தாக்குப் பிடிப்பார்கள்.

Points to ponder against Capital Punishment

* ஆயுள் தண்டனை சட்டம் இருக்கின்ற அமெரிக்க மாகாணங்கள் – 38

* இந்த 38 இடங்களில் உள்ள மாவட்ட தலைமை வழக்கறிஞர்களின் பகிர்வு:
வெள்ளையர் – 98%
ஆப்பிரிக்க அமெரிக்கர் – 1%

* ·பிலடெல்·பியாவில் நடந்த ஒரு ஆய்வின் படி, ஒரே விதமான குற்றங்களைப்
புரிந்தவர்களுள், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் 38 விழுக்காடு அதிகமாக மரண
தண்டனை விதிக்கப் பெறுகிறார்கள்.

* இது வட கரோலினா ஆய்வின் முடிவு. வெள்ளையரைக் கொன்றிருந்தால், விஷ
ஊசி பெறுவதற்கான வாய்ப்பு முன்றரை மடங்கு அதிகரிக்கிறது.

* 73 முதல் 93 வரை நூறு பேர் குற்றமற்றவர் என விடுவிக்கப் பட்டுள்ளார்கள்.

* அவர்கள் விடுதலை ஆவதற்கு முன் சிறையில் இருந்த சராசரி ஆண்டுகள்: 9

* மின் அமர்வின் பிடியில் இருந்து கடைசி நிமிடங்களில் நிரபராதி என
நிரூபிக்கப்பட்டவர்கள்:
2001 – 8
2002 – 9
2003 – 10 (இதுவரை)

* கருத்து கணிப்புகெல்லாம் மதிப்பு உண்டா? முன்னாள், இன்னாள் குற்றவியல்
குமுகாயங்களின் தலைவர்களிடையே எடுத்த கருத்தாய்வின்படி: மரண தண்டனை
சட்டம் கொலை செய்பவனை தடுக்கிறது என்பதை நூற்றுக்கு 84 பேர் நம்பவில்லை.

சில பொருளாதார நிஜங்கள்:

* அமெரிக்கர்கள் செலவாளிகள் என்பதை மீண்டும் வட கரோலினா கருத்தய்வு
அறிவுறுத்துகிறது. ஆயுள் தண்டனையை விட தூக்கு கயிறுக்கு 2.16 மில்லியன்
அதிக டாலர் தேவைப்ப்படுகிறது.

ஏன் இவ்வளவு ஜாஸ்தி செலவு: வக்கீலய்யாவுக்குக் கொடுக்கும் ·பீஸ். (இந்த கணக்குப்
போடபட்ட வருடம் பத்தாண்டுகளுக்கு முன்பு; இப்பொழுது இன்னும் அதிகம் இருக்கும்.)

* இந்தியானா ஆராய்ச்சி: இவ்வளவு அதிகம் செலவு செய்து பல சமயங்களில் ஆயுள்
தண்டனையே கிடைப்பதால், 38 சதவிகிதம் மேலதிக பண விரயம்.

* ·ப்ளோரிடா கணக்கு வழக்கு: (1976 முதல்)
நிறைவேற்றபட்ட மரண தண்டனைகள்: 44
ஒவ்வொரு தண்டனைக்கும் ஆன செலவு: $ 24 மில்லியன்

(பரோல் இல்லாத) ஆயுள் தண்டனை வழக்கு போட்டிருந்தால்,
சேமித்திருக்கக் கூடிய பணம்: ஒரு வருடத்திற்கு $51 மில்லியன்

* டெக்சாஸ் பட்ஜெட்:

ஒரு மரண தண்டனை நிறைவேற்ற: $ 2.3 மில்லியன்
நாற்பது வருடம் ஒருவரை தனி செல்லில், ஆயுள் தண்டனையில்
அடைக்க: மேற்கண்ட மில்லியன்களின் மூன்றில் ஒரு பங்கு.

கடைசியாக காவல்துறையிடம் ஒரு கருத்தாய்வு:

துப்பாக்கி கலாசாரம், அதிக காவல் துறை, இரட்டை ஆயுள் தண்டனை,
சட்ட எளிமையாக்கல், பொருளாதார முன்னேற்றம், போதைப் பொருள் நீக்கம்
ஆகியவற்றையே போலீஸ், மரண தண்டனையை விட அதிகம் விரும்புகிறது.

நன்றி: குகிள், http://www.fdp.dk/ , http://www.deathpenaltyinfo.org/