Monthly Archives: திசெம்பர் 2003

நான் செத்துப் பிழைச்சவண்டா

siliconindia: பிதாமகனுக்கு டிமிக்கி: நான் அடித்துப் போட்டது போல் தூங்கும் ஜாதி. ஆறாவதோ, ஏழாவதோ படிக்கும் போது, ‘கதவை நன்றாகத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு தூங்கு’ என்று சொல்லி சென்றார்கள். வீட்டுக்குள் மீண்டும் நுழைய கொல்லைப் புறம் வழியாக, சொந்த வீட்டிலேயே ஏறி குதித்து, உள் நுழைய வேண்டியிருந்தது. அவர்கள் வந்து ரொம்ப நேரம் கழித்து எழுந்த எனக்கு, ‘திருடன் வந்தது கூடத் தெரியாம தூங்குகிறாயே’ என்று திட்டு வாங்கினது வேறு விஷயம்.

இந்த ஹிமாசல பிரதேச ஆளும் நம்ம கதை மாதிரிதான். எழுபத்தொரு வயசு. இறந்து விட்டார் என்று ஊர்ஜிதப் படுத்தி, பாடையிலும் ஏற்றியாகி விட்டது. மயானத்துகு செல்வதற்கு முன் எகிறி குதிக்கிறார். நம்ம ஊரு கார்த்திக் போல் சித்ரகுப்தனை பார்த்தேன், சொர்க்கத்தின் வாயிலில் நின்றேன் என்று எல்லாம் பூச்சுற்றாமல், ‘க்யோன் இத்னி லோஃக்?’ என்று பொக்கை வாயில் ஆச்சரியப் படுகிறார்.

கட்டையில் வைத்து கட்டும்போது கூட எப்படி எழுந்திருக்க வில்லை என்பதும், ‘மென் இன் ப்ளாக்’கில் வரும் அதிசய உபகரணத்தாலோ, எமதர்மராஜனின் மந்திரத்தாலோ, எப்படி ஒன்றுமே நினைவில் இல்லை என்பது நம்முடைய ஆச்சரியங்கள்.

ரொம்பக் குழம்பாமல் பாராவின் அலகில்லா விளையாட்டு படித்தாலும் இந்த இறப்பிற்கு பின் தத்துவங்களை விளக்கிக் கொள்ளலாம்.

இலக்கணம் கற்க, சரிபார்த்துக் கொள்ள

TAMIL ILAKKANAM – DMK “ஒரு மொழிக்குச் சிறப்பை, அழகைக் கொடுப்பது இலக்கணம். உயிருள்ள எந்த மொழிக்கும் இலக்கணம் இன்றியமையாதது. மொழி சிதைந்து அழகு குன்றிச் சீர் கெட்ட நிலையை அடையாது காப்பது இலக்கணமாகும். “

இந்தியாவின் வால் பையன்கள்

குறைந்த பந்துகளில் நிறைய ஓட்டங்கள் எடுப்பதில் வல்லவர்

என்றார்கள்; ஆமாம்… ஒரு பந்திலேயே வீழ்ந்து விட்டால்,

கணக்கெடுப்பின் போது சௌகரியமாகத்தான் இருக்கும்.

மீண்டும் ஒரு முதல்பந்து முட்டை.

இன்னொரு முட்டை… சாரி, மட்டை வீரர் படேல் வகுத்த

வழியை பின்பற்றியுள்ளார். பார்த்திவ் குறித்து கூட யாரோ

அடுத்த வால் (சுவர்), வளரும் ட்ராவிட் என அடைமொழிகள்

கொடுத்து அறிமுகபடுத்தினார்கள்.

தான் ஒரு சிறந்த ஓட்டக்காரர் என்று பெயரெடுக்க அகர்கர்

விரும்புகிறார். ஓட்டம் எடுக்கும் வீரர் என்னும் பெயர்

நிலைபெறாமலிருக்க, நாளை ஆடும் அடுத்த இன்னிங்சில்

பிராயசித்தம் செய்ய வேண்டும்.

(ரீடி·பின் படி படேல் ஒரு நல்ல பந்துக்கும்; பிபி-பாலாஜியின் படி, தடவி மட்டுமே தாக்குப் பிடிக்கலாமா என்று எண்ணுவதற்குள்

வீழ்ந்து விட்டதாகவும் சொல்கிறார்கள்).

மதுரை திட்டம் போல்…

Chennainetwork.com: திருக்குறள், தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, ஔவையார், பாரதியார், பாரதிதாசன் நூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு

புறநானூறு, மனோன்மணீயம், கலிங்கத்துப்பரணி, பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, பாரதியின் தேசிய கீதங்கள், உள்ளிட்ட பிற நூல்கள்

கம்பராமாயணம்: பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம் மற்றும் யுத்த காண்டம்.

போடுங்கம்மா வோட்டு!

வாக்களிக்க: http://tamil.sify.com/

2003ன் நெ. 1 படம்

அன்பே சிவம் 219

பிதாமகன் 77

காக்க காக்க 59

திருமலை 39

2003ன் மனங்கவர்ந்த ஹீரோ

கமல் 150

விக்ரம் 103

விஜய் 58

தனுஷ் 24

2003ன் சூப்பர் ஹீரோயின்

ஜோதிகா 119

சிநேகா 100

சிம்ரன் 52

த்ரிஷா 42

2003ன் இயக்குநர்

பாலா (பிதாமகன்) 54

கெüதம் (காக்க காக்க) 53

ஹரி (சாமி) 13

தரணி (தூள்) 2

ஷங்கர் (பாய்ஸ்) 2

லீனக்சுக்கு ஆபத்து வருமா?

Year in review: Linux under attack | CNET News.com: சிநெட்டின் 2003-க்கான தொகுப்பு திறந்த ஆணைமூலங்களின் அலசலோடு தொடங்கியுள்ளது. ஆரகிள், திருட்டு இசை, கம்பியில்லா இணைப்பு, இயக்குதளங்கள் என வரும் நாட்களில் தொழில் நுட்பங்களின் அனைத்துத் துறையிலும் போன வருடம் என்ன நடந்தது என்று பருந்துப் பார்வையில் தெரிந்து கொள்ளலாம்.

திருவெம்பாவை & திருப்பாவை

திருவெம்பாவை & திருப்பாவை பாடல்கள்

பொருள் விளக்கும் சுட்டிகள்:

திருவெம்பாவை – மொழிமாற்றம் – G. Vanmikanathan

திருவெம்பாவை – 1 2 3 4 5 6 7 8 9

பின்வரும் திருவெம்பாவை & திருப்பாவைகளுக்கு நன்றி: Dr.N.Ramani

திருப்பாவை – திருவெம்பாவை – திருப்பள்ளியெழுச்சி முன்னுரை

1 – திருவெம்பாவை & திருப்பாவை ஆங்கிலம்

1 – திருவெம்பாவை & திருப்பாவை தமிழ்

2 – திருவெம்பாவை & திருப்பாவை ஆங்கிலம்

2 – திருவெம்பாவை & திருப்பாவை தமிழ்

3 – திருவெம்பாவை & திருப்பாவை ஆங்கிலம்

3 – திருவெம்பாவை & திருப்பாவை தமிழ்

திருவெம்பாவை – 3 – திருத்தம்

4 – திருவெம்பாவை & திருப்பாவை ஆங்கிலம்

4 – திருவெம்பாவை & திருப்பாவை தமிழ்

5 – திருவெம்பாவை & திருப்பாவை ஆங்கிலம்

5 – திருவெம்பாவை & திருப்பாவை தமிழ்

6 – திருவெம்பாவை & திருப்பாவை ஆங்கிலம்

6 – திருவெம்பாவை & திருப்பாவை தமிழ்

7 – திருவெம்பாவை & திருப்பாவை ஆங்கிலம்

7 – திருவெம்பாவை & திருப்பாவை தமிழ்

7 – இராம.கி.யின் மறுமொழி

8 – திருவெம்பாவை & திருப்பாவை ஆங்கிலம்

8 – திருவெம்பாவை & திருப்பாவை தமிழ்

9 – திருவெம்பாவை & திருப்பாவை ஆங்கிலம்

9 – திருவெம்பாவை & திருப்பாவை தமிழ்

10 – திருவெம்பாவை & திருப்பாவை ஆங்கிலம்

10 – திருவெம்பாவை & திருப்பாவை தமிழ்

11 – திருவெம்பாவை & திருப்பாவை ஆங்கிலம்

11 – திருவெம்பாவை & திருப்பாவை தமிழ்

திருவெம்பாவை – 12 திருப்பாவை – 12

திருவெம்பாவை – 13 திருப்பாவை – 13

திருவெம்பாவை – 14 திருப்பாவை – 14

திருவெம்பாவை – 15 திருப்பாவை – 15

திருவெம்பாவை – 16 திருப்பாவை – 16

திருப்பாவை – 18 திருப்பாவை – 19 திருப்பாவை – 20

திருப்பாவை – 21 திருப்பாவை – 22 திருப்பாவை – 23

திருப்பாவை – 24 திருப்பாவை – 25 திருப்பாவை – 26

திருப்பாவை – 27 திருப்பாவை – 28 திருப்பாவை – 29

திருப்பாவை – 30

நன்றி:

Tamil.Net – தமிழ் இணையம்

மெய்கண்டார்