Snap Judgment

கமல்ஹாசன் குறித்து சாரு நிவேதிதா – தப்புத் தாளங்கள்

ஆகஸ்ட் 9, 2007 · 8 மறுமொழிகள்

தமிழர்கள் கமலை அந்நியனாகவே பார்க்கிறார்கள். அவர்களுக்கு அவர் ஒரு elite. அவ்வளவுதான். ஆளவந்தான் படத்தில் ‘he seems to be a necrophelic’ என்று ஒரு வசனம் வரும். புரிகிறதா?

மற்றொரு சம்பவம்: ஆளவந்தான் வந்த சமயம். என் நண்பரும் நடிகருமான ப்ரதாப் போத்தனும் நானும் அந்தப் படத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். படத்தைக் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்தார் ப்ரதாப்.

‘இதையெல்லாம் கமலிடம் சொன்னிர்களா?’ என்று கேட்டேன்.

‘நான் என்ன ஃபீல்டில் இருக்கிறதா, வேண்டாமா?’ என்றார் ப்ரதாப்.

‘பிறகு என்ன சொன்னீர்கள்?’

‘க்ளாஸிக் என்று சொன்னேன். “ம்… உங்களுக்கும் எனக்கும் தெரிகிறது. மக்களுக்குத் தெரியவில்லையே?” என்றார் கமல்’.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால், கமலிடம் யாருமே அவரது படங்களைப் பற்றி பேச முடியாது; பேசியதும் இல்லை என்பதுதான். கமலிடம் பேச்சு இருக்கிறது; செவிகள் இல்லை. எந்தளவு கமல் தனிமைப் பட்டுப் போயிருக்கிறார் என்பதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணம்.

முழுவதும் படிக்க: சிவாஜிக்கு வெளியே – சாரு ஆன்லைன்

பகுப்புகள்: Aalavanthaan · Chaaru · Kamal · Prathab · Sivaji

8 பதில்கள் இது வரை ↓

  • ஆளவந்தான் « Snap Judgment // நவம்பர் 19, 2007 இல் 5:12 மு.பகல் | பதில்

    [...] சாரு நிவேதிதாக்களுக்கு விளங்கவில்ல…? புரியாத மாதிரி வெறுப்பேற்றி காலந்தள்ளுகிறார்களா? [...]

  • karthik // ஜூன் 17, 2008 இல் 1:03 பிற்பகல் | பதில்

    kamal is a one of the legendz in this cine Art\

  • டகிள் பாட்சா // ஆகஸ்ட் 17, 2009 இல் 1:04 மு.பகல் | பதில்

    ஐயோடா சாமி!

    ப்ரதாப் போத்தன் பேசினா அவருக்கே புரியாது. இதுல அவர் பேசி கமலுக்கு மட்டும் புரியவா போகிறது. ப்ரதாப்புடன் சேர்ந்து உங்கள் அறிவு கூட மழுங்கிப் போயிருக்கிறது என்பதற்கு உங்களின் இந்த posting நல்ல உதாரண்ம்

    • SnapJudge // ஆகஸ்ட் 17, 2009 இல் 3:43 மு.பகல்

      டெகிள்,

      —போத்தன் பேசினா அவருக்கே புரியாது. —

      உங்களுக்கு பிரதாப்புடன் தொடர்பு உண்டா? அவருடன் என்ன அளவளாவி இருக்கிறீர்கள்?

      அவர் பேசுவது புரியவில்லை, என்று உடனே சொல்லி இருக்கலாமே?

  • சுவாதி. // ஆகஸ்ட் 17, 2009 இல் 1:45 மு.பகல் | பதில்

    கமலிடம் கருத்துச் சொல்ல முடியாது என்றால் சாருவிடம் அந்தரங்கமாக எதுவும் சொல்ல முடியாது போலிருக்கிறதே?? பிரதாப் போத்தன் அவருடன் பகிர்ந்த கருத்தை இப்படி பகிரங்கமாக எழுதி போட்டுக் கொடுத்திட்டாரே சாரு?? :) :)

    • SnapJudge // ஆகஸ்ட் 17, 2009 இல் 3:39 மு.பகல்

      இவ்வாறு பிரதாப் போத்தான் சொன்னதாகத் திரித்து சொல்லப்பட்டதாகவும், இந்தக் கருத்தை தான் கூறவில்லையென்றும் ப்ரதாப் மறுத்துள்ளார்.

      ‘இவர் சொன்னார்… அவர் சொன்னார்’ என்று இன்னொருவர் புரிந்துகொண்டதை மூன்றாவது நபர் எழுதும்போது, அசலாக சொன்னது விகாரமாகியிருக்கும்.

    • SnapJudge // ஆகஸ்ட் 17, 2009 இல் 3:41 மு.பகல்

      சுவாதி, எவருடனுமே அந்தரங்கமாக எதையுமே சொல்ல முடியாது. எப்பொழுது என் எண்ணங்களை அடுத்தவரிடம் அரட்டையிலோ, அஞ்சலிலோ சொல்கிறேனோ, அப்போதே அது அம்பலம் ஆகும் என்று நினைப்பேன்.

  • suppamani // செப்டம்பர் 27, 2009 இல் 11:52 மு.பகல் | பதில்

    RUBBISH

கருத்துத் தெரிவிக்கவும்